×
 

ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக்..! படக்குழுவினர் பேரதிர்ச்சி..!!

ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியானதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜனநாயகன் விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் நிலையில், அதன் முழு படம் இணையத்தில் வெளியானதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜனநாயகன் திரைப்படம் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது.

பூஜா ஹெட்ச், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன் அவரது இறுதி திரைப்படமாக பேசப்படுகிறது. கடந்த ஜனவரி 9 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக தாமதமாகி வருகிறது.

தணிக்கை வாரியம் சில காட்சிகளை நீக்குமாறு அறிவுறுத்தியதால், படக்குழு நீதிமன்றத்தை நாடிய நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமாகவும் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 9 அன்று இரவு, சமூக ஊடகங்களில் படத்தின் சுமார் ஐந்து நிமிட காட்சிகள் கசிந்து பரவத் தொடங்கின.

இதையும் படிங்க: Election முடிந்தால் ஜனநாயகனுக்கு வழி பிறக்கும்..! விஜய் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்..!

இந்தக் காட்சிகளில் படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ், விஜய்யின் அறிமுக காட்சி, சிறைச்சாலை அமைப்பில் அவர் ஷவல் வைத்திருக்கும் பகுதி, அவரது சிறப்பு ஸ்டைலில் நடக்கும் சண்டை காட்சி மற்றும் “தளபதி கச்சேரி” பாடலின் ஒரு பகுதி ஆகியவை அடங்கியுள்ளன. இந்த ஐந்து நிமிட கிளிப் மற்றும் பாடல் பகுதி பல யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகல.. ஆனாலும் விஜய் அப்சட் ஆகல..! தளபதி சொன்ன ரகசியம்.. உடைத்து பேசிய ஷ்யாம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share