×
 

ஜூலை 23-ல் ஜனநாயகன் ரிலீஸ்..? தெறிக்கவிடும் படத்தின் இணை தயாரிப்பாளர் இன்ஸ்டா ஸ்டோரி..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

ஜனநாயகம் திரைப்படம் ஜூலை 23ஆம் தேதி வெளியாக இருக்கிறதா என்று எதிர்பார்ப்பு இழந்துள்ளது.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகவும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கும் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பல சிக்கல்களுக்குப் பிறகு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த அரசியல் ஆக்‌ஷன் திரைப்படம், விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், விஜய்யின் திரைப்படப் பயணத்துக்கு ஒரு பிரமாண்டமான முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தின் உருவாக்கம் முதல் வெளியீடு வரை பல சவால்களை எதிர்கொண்டது. முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த ஜனநாயகன், சென்சார் தணிக்கை காரணமாக தாமதமானது. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பல மாதங்களாக ரசிகர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தச் சிக்கல் படக்குழுவுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், சமீபத்தில் படத்துக்கு 'A' சான்றிதழ் கிடைத்ததால், வெளியீட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சான்றிதழ் பெறப்பட்டது படக்குழுவினருக்கு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது. 

வெளிநாடுகளில் ஜனநாயகன் ஜூலை 24ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கெனவே முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. வெளிநாடுகளில் ஜூலை 24ஆம் தேதி ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தில் எப்போது வெளிகடப்படும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ் பழனிசாமி தனது இன்ஸ்டால் ஸ்டோரி மூலம் சூசகமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கு.. ரொம்ப பயமா இருக்கு..!! திரையுலக நட்புங்க கிட்ட சைலண்ட்டா புலம்புறாராம் CM விஜய்..!

அதன்படி நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆன விஜய் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படம் ஜூலை 23ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏற்கனவே படத்தின் டிரைலர் வெளியான நிலையில் ஜூலை 23ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளிநாடுகளை விட முன்கூட்டியே ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. 

இதையும் படிங்க: சினிமாவுல அடக்கமா இல்லைனா.. அள்ளிக்கிட்டு போயிடுவாங்க..!! அளவுக்கு மீறி நெருங்கக் கூடாது.. வார்னிங் கொடுத்த நடிகை விசித்ரா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share