×
 

ஓடிடியில் ரிலீசாகிறதா 'லோகா'..?? துல்கர் சல்மான் கொடுத்த அப்டேட் இதுதான்..!!

‘லோகா’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு தயாரிப்பாளர் துல்கர் சல்மான் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் புதிய அத்தியாயமாக உருவெடுத்து வரும் 'லோகா: சாப்டர் 1 சந்திரா' திரைப்படம், வெளியாகி இரண்டு மாதங்களுக்குள் உலகளவில் ரூ.202 கோடி வசூலைத் தாண்டி, தென்னிந்தியாவின் சூப்பர்ஹீரோ ஜானருக்கு புதிய உயரங்களை அளித்துள்ளது. துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரிப்பில், டொமினிக் அருண் இயக்கத்தில் உருவான இந்த டார்க் ஃபேண்டஸி படம், கல்யாணி பிரியதர்ஷனின் தலைமை கதாபாத்திரமான சந்திராவின் மூலம் பார்வையாளர்களை மோகம் கொள்ளச் செய்துள்ளது.

எதிர்கால பெங்களூரை களமாகக் கொண்ட இந்தக் கதை, சந்திரா என்ற மர்மமான பெண் நகரத்திற்கு வந்து, சூப்பர்நேச்சுரல் சக்திகளுடன் போராடும் போது உருவாகும் விறுவிறுப்பான சம்பவங்களைச் சுற்றி அமைகிறது. கல்யாணி பிரியதர்ஷனின் சக்திவாய்ந்த நடிப்பு, நஸ்லேன், சாண்டி மாஸ்டர், அருண் குரியன், சந்து சலிம் குமார், நிஷாந்த் சாகர் ஆகியோரின் ஆதரவுடன், படம் ஒரு புதுமையான மலையாள சூப்பர்ஹீரோ உலகை உருவாக்கியுள்ளது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் 10 நாட்களிலேயே ரூ.100 கோடியைத் தாண்டி, வேகமாக ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்த இரண்டாவது மலையாள படமாக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: Lokah படத்தில் இரத்தம் குடிக்கும் காட்டேரியாக மாறிய நான்..! அப்பா சொன்ன அந்த வார்த்தை - நடிகை கல்யாணி ஓபன் டாக்..!

வெளியான முதல் வாரத்தில் மலையாளத்தில் ரூ.75 கோடி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் ரூ.50 கோடி வசூல் செய்த படம், தற்போது உலகளவில் ரூ. 266 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது. தயாரிப்பாளர் துல்கர் சல்மான், "பார்வையாளர்களின் ஆதரவே இந்தப் பயணத்தை சிறப்பாக்குகிறது. இந்த வெற்றிக்காக 'காந்தா' பட வெளியீட்டையும் தள்ளிவைத்தோம்" என ட்விட்டரில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த வெற்றி, மலையாள சினிமாவின் பான்-இந்திய விரிவாக்கத்திற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லோகா: சாப்டர் 2' அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூப்பர்ஹீரோ யூனிவர்ஸ், தென்னிந்தியாவின் அடுத்த பெரிய புயலாக மாறும் என்பது உறுதி.

இந்நிலையில், ‘லோகா’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு தயாரிப்பாளர் துல்கர் சல்மான் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், போலிச் செய்திகளை புறக்கணித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருங்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: நாளை 'காந்தா' படம் ரிலீஸ் ஆகல.. காரணம் இதுதான்..! ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share