குழந்தையின் பெயர் இதுதான்.. மாதம்பட்டி ரங்கராஜனின் 2வது மனைவி போட்ட பதிவு..!!
ஜாய் கிரிஸில்டா தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ், இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர், நடிகர் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாவார். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவு சேவைத் துறையில் முன்னணியில் உள்ள இவரது நிறுவனம், 400-க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கும், பிரபல நிகழ்ச்சிகளுக்கும் உணவு வழங்கியுள்ளது. நடிகர் கார்த்தியின் திருமணம், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் இவரது சமையல் கவனம் பெற்றுள்ளது.
பொறியியல் பட்டதாரியான ரங்கராஜ், சமையல் மீதான ஆர்வத்தால் 2002-ல் குடும்ப வணிகத்தில் இணைந்தார். பெங்களூரில் உணவகம் தொடங்கிய இவர், மாதம்பட்டியில் சிறு நிகழ்ச்சிகளில் தொடங்கி, பின்னர் திரைப்பட படப்பிடிப்பு தளங்களில் உணவு வழங்கினார். 2013-ல் கோயம்புத்தூர் மாரத்தான் உள்ளிட்ட பெரிய நிகழ்வுகளையும் கவனித்தார்.
இதையும் படிங்க: சிக்கிட்டா சிக்கிட்டா..! கல்யாணம்.. அடுத்த நாளே 6 மாத கர்ப்பம்.. சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்..!!
திரையுலகில், 2019-ல் ‘மெஹந்தி சர்க்கஸ்’ மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘பென்குயின்’ (2020) மற்றும் ‘மிஸ் மேகி’ ஆகிய படங்களில் நடித்தார். விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5-ல் நடுவராக பங்கேற்று, தனது கலகலப்பான பாணியால் ரசிகர்களை கவர்ந்தார்.
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜோய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவர் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஜோய் கிரிசில்டாவுடன் ரங்கராஜ் திருமணம் செய்ததாகவும், ஜோய் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜோய் கிரிசில்டா, ‘ஜில்லா’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். இவர் முன்னதாக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்கை 2018-ல் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்றவர். ரங்கராஜ் மற்றும் ஜோய் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் உறவு இருப்பதாக வதந்திகள் பரவின. குறிப்பாக, காதலர் தினத்தில் ஜோய் பதிவிட்ட புகைப்படங்கள் இந்த சர்ச்சையை தீவிரப்படுத்தின. இவர்களது திருமணம் கோவிலில் எளிய முறையில் நடைபெற்றதாகவும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டாவது திருமணம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்து பதிவிட்டுள்ளார். கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ், மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்ற நிலையில் ஜாஸ் கிரிசில்டாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சிக்கிட்டா சிக்கிட்டா..! கல்யாணம்.. அடுத்த நாளே 6 மாத கர்ப்பம்.. சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்..!!