×
 

என் குழந்தையோட சாபம் உங்கள சும்மா விடாது.. ஆவேசமாக பேசிய ஜாய் கிரிஸில்டா..!!

என் குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா.

தமிழ் சினிமாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, தன்னை ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி மாதம்பட்டி ரங்கராஜ் மீது அளித்த புகாரின் தொடர்ச்சியாக, இன்று சென்னை காவல் ஆணையரகத்தில் 6 மணி நேரம் நீடித்த விசாரணை முடிந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு (All Women Police Station) அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில், ஜாயின் குற்றச்சாட்டுகள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டன. காவல்துறை, சட்டப்படி ரங்கராஜ் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதியளித்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ், 'மெஹந்தி சர்கஸ்' படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் மற்றும் பிரபல சமையல் கலைஞர். அவருக்கு ஏற்கனவே மனைவி ஸ்ருதி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜாய் கிரிஸில்டா, கடந்த 2 ஆண்டுகளாக ரங்கராஜுடன் ஒரே வீட்டில் வாழ்ந்ததாகவும், அவரது குழந்தைக்கு ரங்கராஜ்தான் அப்பா என்றும் விசாரணையில் தெரிவித்தார். அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், தங்கள் திருமணத்தின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்ததாகவும் கூறினார். "மாதம்பட்டி ரங்கராஜ் என்னைத் திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டார். எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும்" என்று அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: என் குழந்தைக்கு நீதி வேண்டும்.. சிக்கிய மாதம்பட்டி.. நேரடியாக முதலமைச்சருக்கு பறந்த புகார்..!!

விசாரணை முடிந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய உணர்ச்சிபூர்வமாக ஜாய், ரங்கராஜ் என்னைத் திருமணம் செய்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. யூடியூப்பில் என்னைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். என்னைப் பலர் குற்றம்சாட்டுகிறார்கள், ரங்கராஜிடம் யாரும் கேள்வி கேட்கவில்லை. கடந்த 2 வருடங்களாக என்ன நடந்தது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் மாதம்பட்டியும் நானும் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை ஒப்படைத்து இருக்கிறேன், அது என்ன என்பதை எப்போது இப்போது சொல்ல முடியாது. விசாரணை நியாயமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதேபோல பல யூடியூப் தளத்தில் என்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வீவ்ஸ் வருகிறது என்பதற்காக எதுவுமே தெரியாமல் யாரைப் பற்றியும் பேசக்கூடாது.

அது மட்டுமல்லாமல் நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். இந்த நேரத்தில் என்னை பற்றி அவதூறாக பேசினால். இந்த குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது. உங்கள் வீட்டிலும் பெண் இருப்பார்கள், அவங்களுக்கும் இதுபோன்ற பாதிப்பு நடந்தால், என்ன செய்வீர்கள். அதை புரிந்து கொண்டு, உண்மை என்னவென்று தெரிந்தால் மட்டும் எழுதுங்கள் என்று கூறினார்.

இந்தப் புகார், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கராஜின் ரசிகர்கள் ஜாயின் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர், அதேசமயம் பெண்கள் உரிமைகள் ஆர்வலர்கள் ஜாயின் பக்கம் நிற்கின்றனர். காவல்துறை, மருத்துவ பரிசோதனை மற்றும் சாட்சிகளின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, சினிமா வட்டாரத்தில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஜாயின் போராட்டம், பெண்களின் உரிமைகளுக்கான எடுத்துக்காட்டாக மாறலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். விசாரணை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: என் குழந்தைக்கு நீதி வேண்டும்.. சிக்கிய மாதம்பட்டி.. நேரடியாக முதலமைச்சருக்கு பறந்த புகார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share