×
 

நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகாவுக்கு பிரமாண்டமாக நடந்த வளைகாப்பு; ஒன்று கூடி வாழ்த்திய பிரபலங்கள்!

சீரியல் நடிகை ஸ்ரித்திகா மற்றும் எஸ்.எஸ்.ஆர் ஆரியன் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் ஸ்ரித்திகாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதுகுறித்த போட்டோஸ் இதோ..

பிரபலங்கள் பத்தி எந்த ஒரு தகவல் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுல கவனம் பெரும்.
 

அந்த வகையில் தான், நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா ஏற்கனவே சனீஷ் என்கிற, தொழிலதிபரை திருமணம் செய்த சில வருடங்களில் விவாகரத்து செய்தது அதிகம் பேசப்பட்டது.

இதையும் படிங்க: 40 வயசிலும் 20 வயசு யங் லுக்கில் த்ரிஷா; அல்ட்ரா மாடர்ன் உடையில் தெறிக்கவிடும் ஹாட் போட்டோ ஷூட்!

இந்நிலையில் கடந்த ஆண்டு, ஸ்ரித்திகா, சன் டிவியில தனக்கு ஜோடியா நடித்த சீரியல் நடிகர் மற்றும் எஸ் எஸ் ஆரின் பேரனுமான, எஸ் எஸ் ஆர்- ஆரியன் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை உறுதி செய்தார்.

தங்களின் காதலை அறிவித்த ஒரே வாரத்தில், மிகவும் எளிமையாக ரிஜிஸ்டர் ஆபிசில் இருவருக்கும்  திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து  மிகவும் பிரமாண்டமாக திருமண வரவேற்பையும் நடத்தி முடித்தனர்.

இது இவர்கள் இருவருக்குமே 2-ஆவது திருமணம் ஆகும். இந்த நிலையில், டிசம்பர் மாதம் ஸ்ரித்திகா கர்ப்பமா இருக்கும் தகவலை இந்த ஜோடி அறிவித்த நிலையில், தற்போது ஸ்ரித்திகாவுக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பும் நடந்து முடிந்துள்ளது.

மிகவும் பிரமாண்டமாக இவர்களின் வளைகாப்பு நடந்த நிலையில், இதில் இரு தரப்பு குடும்பத்தினர் மட்டும் இன்றி... பல சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

ரசிகர்களும் ஸ்ரித்திகா மற்றும் ஆரியன் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

ஆரியன் ஸ்ரித்திகாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன், திருமகள் சீரியலில் வில்லியாக நடித்த நிவேதிதா பங்கஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கும்பமேளாவில் தமன்னா பட டீசர் ரிலீஸ்... இங்க தியேட்டர்ல ரிலீஸ்.. 'தேவசேனா' ரிட்டன்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share