யாரு.. ரேவதியா..? புகழ் மூதாட்டி பெருமாயி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த மூதாட்டி பெருமாயி மாரடைப்பால் காலமானார்.
73 வயதான மூதாட்டி பெருமாயி பெரும்பாலும் கிராமியம் சார்ந்த படங்களில் நடித்து புகழ் பெற்றவர். நடிகர் பசுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த "தண்டட்டி" என்னும் படத்தில் நடித்திருந்தார். 30க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த மூதாட்டி பெருமாயி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அன்னம்பாரிபட்டியை சேர்ந்தவர்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 'தெற்கத்தி பொண்ணு' சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான மூதாட்டி பெருமாயி, அடுத்தடுத்து நடிகர் விஜய் உடன் வில்லு படத்திலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படத்திலும் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவும் அப்படத்தில் யாரு.. ரேவதியா? என்று கேட்டு நடிகையை சபித்துத்தள்ளும் அவரது நடிப்பு காண்போரை ரசிக்க வைத்தது. மேலும் படத்தின் கிளைமாக்ஸிலும் எங்கயாவது ரெண்டு பேரும் போய் சந்தோஷமா இருங்க என்று சொல்லும் அவரது ஆக்ஷன் காண்போரை ரசிக்க வைத்தது.
இதையும் படிங்க: கோல்டன் டிரஸ்... உச்சகட்ட கவர்ச்சியில் சானியா ஐயப்பன் கொண்டாடிய பிறந்தநாள்!
இந்த நிலையில் சமீபகாலமாக உடல் நலிவுற்று, உடல்நலம் சரியில்லாததால் திரைப்படங்களில் நடித்து வராமல் இருந்து வந்த மூதாட்டி பெருமாயி, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது உடல் அன்னம்பாரிபட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மூதாட்டி பெருமாயிக்கு ஒரு மகனும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் பிரசாந்த் என்னை சும்மா விட்டதே இல்லை...! நானே விலகி சென்றாலும் தேடி வருவார் - நடிகை கிரண் பேச்சு..!