×
 

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்..!! Voter ID வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

பிரகாஷ் ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்மன் நகல் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஊடகங்கள் வாயிலாகத்தான் இந்த வழக்கு பற்றி தெரியவந்தது” என்று வாதிட்டார்.

நான்கு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததாக நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிரான கைது வாரண்டை திரும்பப் பெற்று முன்ஜாமீன் வழங்கியுள்ளது பெங்களூர் நீதிமன்றம். இந்த முடிவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரகாஷ் ராஜ், தனது சொந்த மாநிலத்துடன் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை பெற்று வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திலீப் குமார் என்பவர் 48-வது பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் இருமுறை சம்மன் அனுப்பியும் பிரகாஷ் ராஜ் ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் (NBW) பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்று அவர் தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். பிரகாஷ் ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்மன் நகல் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஊடகங்கள் வாயிலாகத்தான் இந்த வழக்கு பற்றி தெரியவந்தது” என்று வாதிட்டார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் பிரகாஷ் ராஜின் பெயர் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். வாதங்களை கேட்ட நீதிபதி, பிரகாஷ் ராஜுக்கு ரூ.4,000 ரொக்கப் பிணை வழங்க உத்தரவிட்டு முன்ஜாமீன் வழங்கினார். 

இதையும் படிங்க: 234 தொகுதிகளில்..126 தோல்வி.. மக்கள் தவெகவிற்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே..!! CM விஜய்க்கு ப்ளூ சட்டை மாறனின் காரசார பதில்..!!

அதேநேரம், வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பிரகாஷ் ராஜ் தரப்பில் முழுமையான ஆவணங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. நடிகரின் வழக்கறிஞர்கள், அவர் எந்தவித சட்ட விதிமீறலும் செய்யவில்லை என்றும், தொழில் ரீதியான காரணங்களுக்காக பல மாநிலங்களில் தங்கியிருந்ததால் இத்தகைய சிக்கல் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர்.

பிரகாஷ் ராஜ் தற்போது பல மொழி படங்களில் பணியாற்றி வரும் நிலையில், இந்த சட்ட சிக்கல் அவரது பணிகளை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்திருந்தது. இந்த விவகாரம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாம்பழ நிற புடவையில் மிளிரும் நடிகை ஷிவானி நாராயணன்..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share