RGV Jail Sentence: ராம் கோபால் வர்மாவுக்கு மூன்று மாதம் சிறை... இதை மட்டும் செய்யாவிட்டால் தண்டனை டபுளாக வாய்ப்பு!
2018 ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மும்பை நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் அபாயமும் உள்ளது.
செக் பவுன்ஸ் வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் சந்திர மிஸ்ரா என்ற நபருக்கு ஸ்ரீ என்ற நிறுவனத்தின் மூலம், 2018 ஆம் ஆண்டு கொடுத்த காசோலை பணமில்லாமல் திரும்பி வந்துள்ளது. இதுதொடர்பாக மகேஷ் சந்திர மிஸ்ரா ராம் கோபால் வர்மா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2022ம் ஆண்டு ராம் கோபால் வர்மாவை குற்றவாளி என மும்பை நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் அவர் அப்போது 5 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை கட்டி ஜாமீன் பெற்றார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக இது குறித்து வாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால் ராம் கோபால் வர்மா ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு மும்பை நீதிமன்றம் 3 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அடுத்த மூன்று மாதங்களுக்குள் புகார்தாரருக்கு இழப்பீடாக வர்மா ரூ.3.72 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் மேலும் 3 மாதங்கள் எளிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநருக்கு சைஃப் அலி கான் எவ்வளவு பணம் கொடுத்தார் தெரியுமா..? குவியும் பரிசுகள்..!
இந்த தீர்ப்பு குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "இந்த வழக்கை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இது எனது முன்னாள் ஊழியருடன் தொடர்புடைய ரூ. 2.38 லட்சம் காசோலை பவுன்ஸ் வழக்கு. வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இதைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜன்னல் வைத்த மாடர்ன் உடையில்... கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்!