×
 

சூனியம் வெச்சிட்டாங்க.! ரத்த வாந்தி எடுக்குறேன்..! பகீர் கிளப்பிய ரவிமோகன்..!

தனக்கு பிளாக் மேஜிக் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ரவி மோகன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னைகள், மனைவி ஆர்த்தி ரவியுடனான உறவு முறிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்து சென்னையில் அவசர பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இந்த சந்திப்பில் அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார். அந்த பிரஸ்மீட்டின் முக்கிய பகுதியாக, தனக்கு தொடர்ந்து ரத்த வாந்தி ஏற்பட்டு வருவதாகவும், தன்மீது பிளாக் மேஜிக் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். 

 ரவி மோகன் தனது பேச்சைத் தொடங்கியபோது, இது தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது என்றும், சினிமாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வலியுறுத்தினார். தான் இதுவரை அமைதியாக இருந்தது தவறு என்றும், இனி சாதுவாக இருக்கப் போவதில்லை என்றும் கூறினார். தனது 23 வருட திருமண வாழ்க்கையில் பல்வேறு அவமானங்கள், உணர்ச்சி ரீதியான, உடல் ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான துன்பங்களை சந்தித்ததாக அவர் குற்றம் சாட்டினார். 

முக்கியமாக, “எனக்கு ரத்த வாந்தி வந்துகிட்டு இருக்கு. பிளாக் மேஜிக் பண்ணிட்டிருக்காங்க” என்று நேரடியாகக் கூறினார். இந்த நிலையில் தான் மருத்துவ உதவி தேட வேண்டியிருப்பதாகவும், ஆனால் சிலர் தன்னை அணுகவிடாமல் தடுப்பதாகவும் பகிர்ந்துகொண்டார். தனக்கு முழு ஆதாரங்களும் இருப்பதாகவும், அவற்றை வெளியிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கெனிஷாவை கட்டி அனைத்து நெகிழ்ந்த ரவி மோகன்..!! உத்சவ் 2026 விழாவில் கிடைத்த ‘தேவி ரத்னா' விருது..!

மேலும், தனது விவாகரத்து வழக்கு முடியும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், தன்னை சீண்டிப் பார்க்க விரும்புபவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். மூன்றெழுத்து இட்லி நடிகை தான் காரணம் என்று குறிப்பிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார். 

இதையும் படிங்க: மக்கள் அதிகாரத்தைக் கொடுக்கலாம்.. ஆனால் மரியாதையைச் சம்பாதிக்க வேண்டும்..!! நடிகர் ரவிமோகன் விஜய்க்கு சொன்ன அட்வைஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share