என்னால வெளில வர முடியல.. மன்னிச்சிடுங்க..!! நடிகர் ஷாருக்கான் உருக்கமான பதிவு..!!
தனது பிறந்தநாளன்று தனக்காக காத்திருந்த அன்பான மக்கள் அனைவரையும் சந்திக்க முடியாததற்கு நடிகர் ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது 60வது பிறந்தநாளான நவம்பர் 2 அன்று, ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கோரியுள்ளார். ஆண்டுதோறும் மும்பை மன்னத் இல்லத்தின் பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து, கைகளை அசைத்து அன்பு பகிரும் வழக்கத்தை இம்முறை கைவிட நேரிட்டதால், சமூக வலைதளத்தில் உருக்கமான செய்தி வெளியிட்டார் கிங் கான்.
நேற்று காலை முதலே மன்னத் வாசலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மழையையும் பொருட்படுத்தாமல், பதாகைகள், போஸ்டர்கள், டி-ஷர்ட்களுடன் காத்திருந்தனர். இந்தியா மட்டுமல்ல, உலகெங்குமிருந்து வந்த ரசிகர்கள் ஷாருக்கின் ஒரு பார்வைக்காக மரத்தில் ஏறி, சாலையில் நின்று கொண்டாடினர். ஆனால், அதிகாரிகள் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியதால், ஷாருக்கானால் தோன்ற முடியவில்லை.
இதையும் படிங்க: கருப்பு சேலையில் அழகிய மலர்..! குளிர் காலத்தில் சூடேற்றிய நடிகை லாஸ்லியாவின் கிளிக்ஸ்..!
இதனையடுத்து எக்ஸ் பக்கத்தில் ஷாருக்கான் பதிவிட்டது: “என்னைச் சந்திக்க காத்திருந்த அனைத்து அன்பு ரசிகர்களிடமும் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி வெளியே வர முடியாது என்பதால் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அனைவரின் பாதுகாப்புக்காகவுமே இது. புரிந்துகொண்டதற்கு நன்றி. நம்புங்கள், நான் உங்களைப் பார்க்காமல் இருப்பது எனக்கு உங்களை விட அதிக வேதனை. உங்களுடன் அன்பைப் பகிர விரும்பினேன். அனைவரையும் நேசிக்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
இப்பதிவு வைரலாகி, லட்சக்கணக்கான லைக்குகள், ரீட்வீட்களைப் பெற்றது. ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், “பாதுகாப்பு முக்கியம் கிங்! உங்கள் அன்பு எங்களை சென்றடைகிறது” என ஆதரவு தெரிவித்தனர். சிலர், “மழையில் நின்றோம், ஆனால் உங்கள் செய்தி போதும்” எனக் கூறினர். மன்னத் தற்போது புனரமைப்பில் இருப்பதால், ஷாருக் குடும்பத்தினர் பாலி ஹில்லில் தங்கியுள்ளனர். இருப்பினும், ரசிகர்கள் மன்னத் முன்பு திரண்டது போலீசாரை திணரவைத்தது. மேலும் இதனால் பாந்த்ரா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இன்ப அதிர்ச்சியாக, ஷாருக்கின் நடித்துள்ள புதிய படத்தின் பெயர் டீசர் ‘கிங்’ வெளியிடப்பட்டது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் மகள் சுஹானா கானுடன் முதல்முறை இணைந்துள்ளார். இப்படம் 2026ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
60 வயதிலும் ஷாருக்கின் ரசிகர் பட்டாளம் குறையவில்லை. ‘பதான்’, ‘ஜவான்’ வெற்றிகளுக்குப் பின், ‘கிங்’ எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த ஷாருக், விரைவில் சந்திப்போம் என உறுதியளித்தார். இந்நிகழ்வு ஷாருக்கின் ரசிகர் தொடர்பை மீண்டும் நிரூபிக்கிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையால் ஏமாற்றம் ஏற்பட்டாலும், அவரது உருக்கமான மன்னிப்பு ரசிகர்களை ஆறுதல்படுத்தியது. #HappyBirthdaySRK, #KingKhanAt60 ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியது..!!
இதையும் படிங்க: என்னடா.. இது விஷாலுக்கு வந்த சோதனை..! மீண்டும் எழுந்த சண்டையால் நிறுத்தப்பட்ட 'மகுடம்' படப்பிடிப்பு..!