×
 

தளபதியின் ரீல் தங்கை மல்லிகாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய போட்டோஸ்!

தளபதி விஜய்க்கு தங்கையாக 'திருப்பாச்சி' படத்தில் நடித்த நடிகை மல்லிகா தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக மாறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இதோ...

கேரள மாநிலத்து வரவான, நடிகை மல்லிகாவின் உண்மையான பெயர் ரீஜா ஜான்சன். 
 

கிருஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர், தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன், மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார்.

இதையும் படிங்க: என்ன சிம்ரன் இதெல்லாம்? குட்டை பாடவையில் குதூகலம் பண்ணும் பூஜா ஹெக்டே!

அந்த சமயத்தில், மலையாள இயக்குனர் அதூர் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான 'நிழல்குத்து' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இதை தொடர்ந்து, இயக்குனர் சேரன் இயக்கி... ஹீரோவாக நடித்த 'ஆட்டோகிராப்' படத்தில்,  சேரனின் பள்ளி பருவ காதலியாக நடித்தார். இவர் நடித்த கமலா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

மல்லிகாவை தவிர இந்த படத்தில், கோபிகா, சினேகா, கனிகா, என பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம் பேர் விருதை வென்றார்.

இதன் பின்னர், தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார் மல்லிகா. 

குறிப்பாக தமிழில், தளபதி விஜய்க்கு தங்கையாக 'திருப்பாச்சி' படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தை தொடர்ந்து உனக்கும் எனக்கும், சென்னையில் ஒரு நாள் போன்ற சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.

தமிழில் பெரிதாக திரைப்பட வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், அஞ்சலி மற்றும் திருவிளையாடல் என்கிற இரு சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.

கடைசியாக மலையாளத்தில் உருவான 'காத்தவீடு' என்கிற படத்தில் நடித்தார். அதன் பின்னர் பெற்றோர் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டே மொத்தமாக விலகினார்.

தற்போது மல்லிகாவுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆளே அடையாளம் தெரியாமல் மிகவும் குண்டாக மாறி உள்ளார். இவரது ரீசென்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவங்களா தளபதியின் ரீல் தங்கை அப்படினு ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதையும் படிங்க: இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு..! விவாகரத்து பிரச்சனை நடுவில் ரவி மோகன் செய்த தரமான சம்பவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share