×
 

இதிலிருந்து நான் விலகுறேன்.. நடிகை ஐஸ்வர்ய லட்சுமி எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்..!!

நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதால் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி அறிவித்துள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் தனது பயணத்தை தொடங்கி, இன்று மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. தனது சிறப்பான நடிப்பு திறமையாலும், வசீகரமான தோற்றத்தாலும் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.

இந்நிலையில் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிப்பு தொழிலில் முழுமையாக கவனம் செலுத்த விரும்புவதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஹைப்பை ஏத்தும் கவினின் 'கிஸ்'..! படத்திற்கு 'தணிக்கை குழு' அளித்த சான்றிதழால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மலையாள சினிமா மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழ் சினிமாவில் 'ஆக்ஷன்', 'ஜகமே தந்திரம்', 'பொன்னியின் செல்வன்', 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான 'மாமன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இத்தகைய வெற்றிகளுக்கிடையே, சமூக வலைத்தளங்களின் அதிக பலம் தனது சிந்தனை மற்றும் உணர்வுகளைப் பறிக்கிறது என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "சமூக வலைத்தளங்கள் எனது மகிழ்ச்சியை கெடுக்கிறது. இது எனக்கு தேவையற்ற சந்தோஷத்தைத் தருகிறது, ஆனால் உண்மையான மகிழ்ச்சியை விலக்குகிறது. நான் மறக்கப்படுவதற்கான ரிஸ்க் எடுக்கிறேன். நடிப்பில் முழு கவனம் செலுத்தி, அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பை முடிவாக, "அர்த்தமுள்ள சினிமா உருவாக்கினால், எனக்கு அன்பு தாருங்கள்" என்று ரசிகர்களிடம் கோரியுள்ளார்.

இந்த முடிவு, சமூக வலைத்தளங்களின் எதிர்மறை தாக்கம் குறித்து பல திரைப்பட நட்சத்திரங்களை சிந்திக்க வைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே அனுஷ்கா ஷெட்டி போன்றவர்கள் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஐஸ்வர்யா லட்சுமியின் ரசிகர்கள் இந்த செய்தியால் வருத்தமடைந்துள்ளனர். இருப்பினும், அவரது எதிர்கால சினிமா பணிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவரது அடுத்த படங்கள் எது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இந்த அறிவிப்பு சினிமா உலகில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.


 

இதையும் படிங்க: இதுக்கெல்லாமா பட வாய்ப்புகளை வேணாமுன்னு சொல்வாங்க..! தயக்கத்தால் சான்ஸை தட்டி விடும் நடிகை திவ்யபாரதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share