×
 

விஜய் மாதிரி வருவார் சூர்யா சேதுபதி.. ட்ரோல் கிங்குக்கு வனிதா வக்காலத்து..!

விஜய்சேதுபதி மகன் சூர்யாவை பீனிக்ஸ் பட விஷயத்தில் கிண்டல் செய்கிறார்கள். இது அவர் பெரிய ஆளாக வருவதற்கான அறிகுறி என கூறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் மிஸ்டர் & மிஸஸ். இந்த படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரிக்க, அதில் கதாநாயகியாக நடித்துள்ளார் வனிதா விஜயகுமார். முன்னாள் காதலர்களான வனிதாவும், ராபர்ட் மாஸ்டரும் இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை 11ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த படத்தின் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது. அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த வனிதா விஜயகுமார் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், என் மகள் ஜோவிகா தெலுங்கில் நடிக்கப் போகிறார். அடுத்து தமிழில் நடிப்பார். என் மகளை நிறைய ட்ரோல் செய்கிறார்கள் என்று கூறினார். மேலும் விஜய் சேதுபதி மகன் சூர்யா குறித்து பலரும் பலவிதமாக விமர்சித்து வருவதை நான் பார்த்துக் கொண்டுதான் உள்ளேன். விஜய்சேதுபதி மகன் சூர்யாவை பீனிக்ஸ் பட விஷயத்தில் கடுமையாக விமர்சனம், கிண்டல் செய்கிறார்கள். ஒருத்தரை ட்ரோல் செய்தால் தான் தளபதி விஜய் மாதிரி ஸ்டாராக மாறுவதற்கான அறிகுறி. 

இதையும் படிங்க: ரஜினிக்கே ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்... "மிஸ்டர் & மிஸ்ஸஸ்" படக்குழுவின் சர்ப்ரைஸான அப்டேட்...!

நான் விஜய் உடன் இணைந்து சந்திரலேகா படத்தில் நடித்த காலத்தில் விஜய்யின் ஏதோ ஒரு படம் ரிலீசாகி இருந்தது. நாங்கள் தியேட்டருக்கு சென்றோம். அப்போது விஜய்யை பார்த்து, அவரது முகத்தை பார்த்து கொசு அடித்தார்கள். இதெல்லாம் ஒரு மூஞ்சியா என சொன்னார்கள். அதை நானே நேரடியாக பார்த்து உள்ளேன். அப்போது எங்களுடன் விஜய்யும் உள்ளார். இது விஜய்க்கும் நன்றாக தெரியும். நாளைய தீர்ப்பு படத்திலும் விஜய்க்கு இதுதான் நடந்தது. ஆனால் எல்லா விமர்சனங்களையும் தாண்டி, போராடி விஜய் இன்னைக்கு ஒரு தளபதியா, ஒரு வருங்கால முதல்வரா பார்க்கிற அளவிற்கு ஒரு கட்சிக்கே தலைவரா வந்து ஜெயிச்சி இருக்காரு. தமிழ்நாட்டு மக்கள் அன்பு வைத்து விட்டால் போதும்.

சூர்யா சேதுபதிக்கு நான் சொல்றது என்னன்னா போராடி அவங்க அப்பாவை விட பெரிய ஹீரோவாக வரணும். விஜய் சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார். என் மகளும் ஜெயிப்பாள். இதுதான் ஜோவிகாவுக்கும். நயன்தாரா, த்ரிஷா வந்த புதிதில் அனைவரும் அனைவரையும் விமர்சித்து தான் உள்ளோம். அவர்களது பழைய படங்களைப் பார்த்தால் என்ன இப்படி இருக்கிறார்கள் என்று தோன்றும். எல்லோருமே வளரட்டும். ஒரு வெற்றிக்குப் பின்னால் இன்னொரு வெற்றி. அப்போதுதான் அனைவருக்கும் இயல்பாகவே அறிவு முதிர்ச்சி வரும்" என்றார். 

இதையும் படிங்க: Time to #GetChikitufied.. வெளியானது 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share