கொடைக்கானல் செல்லும் தவெக தலைவர் விஜய்... கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
தவெக கட்சி தலைவர் விஜய் கொடைக்கானல் செல்ல உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் அரசியல் ரீதியாக வரவேற்க வேண்டாம் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜன நாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். இப்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் 90 சதவீதக் காட்சிகள் எல்லாம் பனையூர் உருவாக்கப்பட்ட செட்டில்தான் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வெயிலுக்கு இதமான இடத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திரையில் தான் நீங்க ஹீரோ; இதுல நீங்க ஜீரோ... விஜய்யை விளாசிய போஸ் வெங்கட்!!
வரும் மே 2ம் தேதி முதல் ஜன நாயகன் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த எச். வினோத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கதைப்படி பிளாஷ்பேக் போர்ஷன்கள் சில கொடைக்கானலில் படமாக்கப்பட வேண்டிய சூழல் உள்ள நிலையில், விஜய் அடுத்ததாக கொடைக்கானலுக்கு படக்குழுவுடன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வராத ஒரு கிராமத்துக்குள் படப்பிடிப்பை நடத்த எச். வினோத் பக்காவாக பிளான் போட்டுள்ளதாக கூறுகின்றனர்.
கூடிய விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அவர் நிறைவு செய்துவிடுவார் என்றும் விஜய் தனது அரசியல் பயணத்துக்காக அதிக நேரத்தை ஒதுக்க முடிவு செய்துள்ள நிலையில், ஜன நாயகன் படப்பிடிப்பு பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என்கின்றனர். விஜய்யுடன் இணைந்து ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே மே 1ம் தேதி முதல் நாள் காட்சியை ரசிகர்களுடன் பார்த்து முடித்துவிட்டு அதன் பின்னர் தான் கொடைக்கானலுக்கு புறப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே விஜய் தனிப்பட்ட முறையில் கொடைக்கானல் செல்வதால், மாவட்ட செயலாளர்கள் அரசியல் ரீதியாக வரவேற்க வேண்டாம் என தமிழக வெற்றி கழகம் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: வெறுப்பு வேண்டாம் மனிதநேயம் போதும்..! இந்தியா-பாகிஸ்தான் மக்களுக்கு விஜய் ஆண்டனி ஆதரவு..!