2026ல் விஜய் ஜெயிக்க மாட்டார்.. நவ.-ல் சினிமாவுக்கு வந்து விடுவார்..! சவால் விட்ட நடிகையால் சர்ச்சை..!
நடிகை ஒருவர் விஜய் அடுத்த வருடம் நடிக்க வருவார் என கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்காவில் வாழும் தமிழ் பெண் தயாரிப்பாளர் மற்றும் நடிகை சிந்தியா தனது புதிய திரைப்படம் “அனலி” குறித்து விரிவாக பேசினார். குறிப்பாக தினேஷ் தினா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ஜனவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிந்தியா கூறியதுபோல், இது அவர் தயாரித்து நடிக்கும் மூன்றாவது படம் ஆகும், மேலும் அவர் முன் தயாரித்த படங்கள் மூலம் பெரும் அனுபவம் கெட்டுள்ளார். இதனை அடுத்து சிந்தியா தனது பேட்டியில், “நானே சொந்தமாக சம்பாதித்து இந்த படங்களில் முதலீடு செய்கிறேன். எங்கே விட்டாலும் அங்கே தான் தேட வேண்டும் என்று சினிமாத் துறைகளை மீண்டும் படம் தயாரிக்கிறேன். இதற்கு முன்பு ‘தினசரி’ என்ற படத்தில் நடித்தேன். அதற்காக இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்தார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது” என்றார். அத்துடன் அனலி படத்தில், சிந்தியா தன்னை முழுமையாக ஆக்ஷன் ஹீரோயினாக சமர்ப்பித்து நடித்திருப்பதை அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..!! தேதி குறிச்சாச்சு..!! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடிக்கு எப்போ கல்யாணம் தெரியுமா..??
அதன்படி “மற்ற பெரிய ஹீரோக்கள் தயங்கும் சண்டை காட்சிகளில் நான் துணிச்சலாக நடித்தேன். இதுவே எனக்கு பெருமை,” என்று அவர் கூறினார். மேலும், அவர் சேர்த்து கூறியது, புதிய படங்கள் தயாரிக்கும் போது திரைப்பட உலகில் பிரபல ஹீரோக்களுடன் மோதுவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். குறிப்பாக, “விஜயின் ‘ஜனநாயகன்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ போன்ற படங்களுடன் ‘அனலி’ மோதுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. எனக்கு ஆசை, விஜய் வைத்து படம் தயாரிக்க வேண்டும்,” என்றார்.
மேலும் சிந்தியா தனது சினிமா வாழ்க்கையின் முன்னேற்றத்தையும், எதிர்கால கனவுகளையும் பகிர்ந்தார். அதில் தான் மிகப்பெரிய குண்டை போட்டார். அதில் “எனக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். 2026 தேர்தல் வருகிறது. அதில் விஜய் வெற்றி பெற மாட்டார். நவம்பருக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருவார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான் தயாரிக்கும் படத்தில் அவர் நடிப்பார் என நம்புகிறேன். அடுத்து ஜி.வி. பிரகாஷ் இசையில் ஒரு படம் தயாரிக்கவும் ஆசை,” என்று அவர் தெரிவித்தார். சிந்தியா, பெண்ணாக இருப்பதால் சந்திக்கும் சவால்களையும், அவமானங்களையும் உணர்ந்துள்ளார்.
அதனை குறித்து பேசிய அவர், “பெண்ணாக இருப்பதால் நிறைய அவமானங்கள், டிரோல்கள் எதிர்கொள்கிறேன். ஆனாலும் அதை மீறி ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு,” என்று அவர் நேர்மையாக பகிர்ந்தார். அவரது முன்னோர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள். “அமெரிக்காவில் வளர்ந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களை பார்த்து, தமிழ் படித்து, தமிழ் சினிமா தயாரித்து நான் நடிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
எனவே அனலி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் பி.வாசு மகன் சக்தி வாசு நடித்துள்ளார். இந்த படத்தின் திரைக்கதையில் ஆக்ஷன், காதல் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த காட்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்த படம், தமிழ் சினிமாவில் சுவாரஸ்யமான முயற்சியாகும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
ஆகவே சிந்தியாவின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவில் பெண்கள் தயாரிப்பாளர்களும், நடிகைகளும் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, தனிப்பட்ட முதலீட்டால் படம் தயாரித்து, அதில் முழுமையாக நடித்துள்ள இவர், சினிமா உலகில் தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் முன்னேற முயற்சித்து வருவதை இந்த படத்தின் வெளியீடு எதிர்பார்த்திருக்கும்.
இதையும் படிங்க: வதந்திகளை நம்ப வேண்டாம்.. இயக்குநர் பாரதிராஜா நலமாக தான் உள்ளார்..! குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்..!