மவனே... ரெட்ரோ-வை அரை மணி நேரம் தாண்டி பார்த்துட்டா நீ வீரன்டா..! குமுறும் ரசிகர்கள்..!
இயக்குநர்களே ஏன் சூர்யாவை வைத்து இப்படி அடிக்கிறீர்கள் என கதறுகிறார்கள் ரசிகர்கள்.
பக்கா ஆக்ஷன் படம். ஆனால் சிரிப்பின் முக்கியத்துவம் பேசுகிறது. சிரிக்காத சூர்யா யாரை சிரிக்க வைக்கிறார்? எப்படி அவர்களை சிரிக்க வைக்கிறார் என்பது கரு. ஆனால், தியேட்டருகு படம் பார்க்க வந்தவர்கள்தான் ஏண்டா இந்தப்டத்தை பார்க்க வந்தோம் என்று அழுகிறார்கள். காரணம் கங்குவாவை விட ரெட்ரோ படு மொக்கை என அங்கலாய்க்கிறார்கள் ரசிகர்கள். இயக்குநர்களே ஏன் சூர்யாவை வைத்து இப்படி அடிக்கிறீர்கள் என கதறுகிறார்கள் ரசிகர்கள்.
ஒரு அழுத்தமான கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூர்யாவுக்கு ரெட்ரோ படம் அவர் எதிர்பார்த்த கம்பேக் கொடுக்கவில்லை. கதையை பற்றி சொன்னால் அது தர்மமாக இருக்காது. கொஞ்சம் ஜில்லா, கொஞ்சம் லியோ, கொஞ்சம் கபாலி என மூன்று படங்களின் காக்டெய்ல்தான் இந்த ரெட்ரோ. அந்தவகையில் அதரப்பழசான கதையை கையில் எடுத்த கார்த்திக் சுப்புராஜ், அதற்கு புதுவித திரைக்கதை ஃபார்முலாவை கொடுக்க முயற்சி குதறி வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களின் மொரட்டு செலிப்ரேஷன்ஸ்... அதிரும் தியேட்டர்கள்..!
ஆனால் அவை ஒரு சில இடங்களில் மட்டுமே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மீதி இடங்களில் பொறுமையை சோதித்திருக்கிறது. படத்தின் முதல் அரை மணி நேரம் கொஞ்சம் விறுவிறுப்பாக ஆரம்பித்து ஓடினாலும் போகப் போக ஜவ்வாக இழுத்து... இடைவேளை காட்சியில் மட்டும்தான் கொஞ்சம் சூடு பிடித்து.. இரண்டாம் பாதியில் மீண்டும் நொண்டியடித்து தவழ்கிறது. ஒரு கட்டத்தில் படம் முடிந்தால் போதும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது. கார்த்திக் சுப்புராஜ் சார் உங்களுக்கு சூர்யா என்னதான் துரோகம் செய்தார்... இப்படி வைத்து செய்து விட்டீர்களே.. பாஸ்.
நடிப்பை பொருத்தவரை சூர்யா இந்த படத்தில் நாலடிக்கு எட்டடி பாய்ந்துள்ளார். ஒரு பக்கம் முரட்டுத்தனமான கேங்ஸ்டர், இன்னொரு பக்கம் அன்பான கணவன் என இரண்டு மாறுபட்ட நடிப்பை காட்டி இருக்கிறார். பூஜா ஹெக்டே கேரியரில் இதுதான் அவருடைய சிறந்த நடிப்பு என்று தாராளமாக சொல்லலாம். ஆனால் பாவம் அம்மணி நடித்த எந்தப்படமாவது இங்கே ஓடி இருக்கிறதா..?
படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் சந்தோஷ நாராயணனின் இசை மற்றும் பாடல்கள். கனிமா பாடல் ஏற்கனவே ஹிட்டாகிய நிலையில் திரையில் பார்ப்பதற்கு இன்னும் ரசனை. அதேபோல் ஸ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.
தூத்துக்குடியில் ஆரம்பித்து கேரளா, அந்தமான் என 90களின் காலகட்டத்தை அட்டகாசமாக திரையில் பதிவு செய்திருக்கிறார். தொடர்ந்து ஒரே பாணியிலான கதையை எழுதி வரும் கார்த்திக் சுப்புராஜ் இனி தன்னுடைய கதைத்தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். இப்படியே தொடர்ந்தால் ரசிகர்களுக்கு வெகு விரைவில் இவருடைய படங்கள் சலிப்பை ஏற்படுத்தி விடும். மொத்தத்தில் ரெட்ரோ, கழுகாக பறக்க நினைத்த காக்கா..! சூர்யாவின் சம்பவமாக இருக்கும் என நினைத்தால் பாவம் சூர்யாவை இந்தப்படம் சம்பவம் செய்து விட்டது.
இதையும் படிங்க: ரெட்ரோ படம் குறித்து சூர்யா சொன்ன அந்த வார்த்தை..! நெகிழ்ச்சி பொங்க பேசிய கார்த்திக் சுப்புராஜ்..!