அறிவழகன் மீது ரத்னாவுக்கு வந்த பொஸசிவ்! பரணி கொடுத்த ஐடியா!
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் சூடாமணி போட்டோவை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்து விட இசக்கி கண் கலங்கி நின்ற நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம்.
அதாவது சண்முகத்தின் செயலால் இசக்கி மனமுடைந்து நிற்க, வீட்டிற்கு வந்த பரணி நீ இப்படி பண்ணி இருக்க கூடாது, அவ என்ன தப்பு பண்ணா என்று சண்முகத்திடம் சண்டையிடுகிறாள்.
சண்முகம் அவ எதுக்கு லேட்டா வந்தா என்று கோபப்பட பரணி இதற்கு இடையில் ஏதோ நடந்து இருக்கு என்று சொல்கிறாள். அடுத்ததாக வீட்டில் இசக்கி சாப்பிடாமல் வருத்தத்தில் இருக்கிறாள். மறுபக்கம் ஸ்கூலில் அறிவழகன் சாப்பிட்டு கொண்டிருக்க அங்கு வந்த மாலதி டீச்சர் அவனுடன் சாப்பிட உட்காருகிறாள்.
ரத்னா வருவதை கவனித்த அவள், என்ன லன்ச் சார் என்று அறிவழகன் சாப்பாட்டை எடுத்து சாப்பிட அவன் மாலதி கொண்டு வந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட ரத்னா இதை பார்த்து டென்ஷன் ஆகிறாள். பிறகு ஸ்கூல் முடிந்து கிளம்பும் போது, மாலதி டீச்சர் தன்னுடைய ஸ்கூட்டரை கீழே தள்ளி விட்டு விழுந்து விட்டதாக நாடகம் போடுகிறாள்.
இதையும் படிங்க: Anna Serial: சௌந்தர பாண்டியின் சதியால்... சண்முகத்தின் கோபத்திற்கு ஆளான இசக்கி!
இதை பார்த்த அறிவழகன் அவளுக்கு உதவி செய்ய... ரத்னாவை பார்த்த மாலதி டீச்சர் அவனை கட்டியணைத்து நன்றி சொல்ல ரத்னா மேலும் கடுப்பாகிறாள். மாலதி டீச்சரை கூப்பிட்டு வார்னிங் கொடுக்க அவள் நான் எல்லாரிடமும் சோசியலாக தான் பழகுகிறேன், உங்க பார்வையில் தான் தப்பு இருக்கு என்று பதிலடி கொடுக்கிறாள்.
ரத்னா கோபமாக வீட்டிற்கு வர அறிவழகன் வீட்டிற்கு வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்ய ரத்னா யார் யாரை கட்டி பிடிச்சா எனக்கு என்ன என்று தனது மனதுக்குள் இருக்கும் பொஸசிவ்வை வெளிப்படுத்த பரணி இதை நோட் செய்து அறிவழகனை சமாதானம் செய்கிறாள்.
ரத்னாவுக்குள் இருக்கும் காதலை வெளியே கொண்டு வந்து விட்டால் அவள் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி விடுவாள் என்று அறிவுரை வழங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Anna Serial: அண்ணனை அம்மாவாக நினைக்கும் தங்கைகள் - பஞ்சாயத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்!