குளோனிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்..! அச்சு அசலாக அவரை போலவே இருக்கும் இவர் யார்..!
பார்க்க ரஜினியை போலவே இருக்கும் நபரின் நடன வீடியோ இணையத்தில் வைரல்.
அனைத்து சினிமா துறையிலும் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் வேடங்களை அணிந்து பிரபலமாகிறவர்கள் அநேகர். அதுமட்டுமல்லாது இன்று சோசியல் மீடியா அதிகரித்துள்ள காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு பிடித்த காரியங்களை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவாஜி, எம்ஜிஆர் என இவர்கள் அனைவரது கெட்டப்புகளையும் போட்டு நாடகத்தில் நடித்து பெயர் வாங்கியவர்கள் பலரும் உண்டு.
ஆனால் இப்பொழுதோ ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஏஐ தொழில்நுட்பம் வந்திருக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் எவரை போல வேண்டுமானாலும் மாறிக்கொள்ளும் வகையில் அதில் சிறப்பு அம்சங்கள் இடம் பெற்று இருப்பதால் இப்பொழுது வெளியே வரும் செய்திகள் கூட உண்மையா பொய்யா என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் ஒவ்வொரு நடிகர்களின் மீதும் மிகவும் பாசம் வைத்திருக்கும் ரசிகர்கள் இங்கு அதிகமாக உள்ளனர். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீதும் பாசம் வைத்திருக்கும் அநேக ரசிகர்களை நாம் பார்த்திருக்க முடியும். ஏன்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது இவ்வளவு காதலை ரசிகர்கள் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு உதாரணம் அவருடைய படங்கள் தான்.
இதையும் படிங்க: மைசூரில் மாஸ் காட்டிய நடிகர் ரஜினி காந்த்..! படப்பிடிப்புக்காக வந்த இடத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்..!
1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார்.
அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார். இப்படி பட்ட சூழலில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும், இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியானது.இதனை கண்டு அவரது ரசிகர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் இருக்க, சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் இயக்கம் தான். இதில் அனிரூத்தின் இசை மக்களை மட்டுமல்லாது ரஜினியையே கவரும் அளவிற்கு இருந்தது.
இப்படி அலப்பறையை கிளப்பும் படம் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்க, ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதன்படி தனிநபர் ஒருவர் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் "என்ன அப்படியே Xerox எடுத்த மாதிரியே இருக்காப்ளே.." என்ற வரிகள் போடப்பட்டு அதன் கீழ் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் ஊதா நிற பணியனுடன் ஒருவர் பார்க்க ரஜினி காந்த் போலவே இருக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி இருக்கிறார்.
இதனை பார்த்த ரஜினியின் ரசிகர்கள் இது உண்மையிலேயே ரஜினியா அல்லாது ஏஐ- ஆ என குழப்பத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: வெற்றி நடைபோடும் விஜய் ஆண்டனியின் "மார்கன்" படம்..! 'ஸ்னீக் பிக்' காட்சி வெளியாகி வைரல்..!