திராட்சைப் பழத்துடன் புதிய லுக்..!! ரசிகர்களை கவர புது முயற்சி.. நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
டிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பு, கவர்ச்சியான திரைபடங்கள் மற்றும் தனித்துவமான ஸ்கிரீன் பிரசென்ஸால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் ஸ்ருஷ்டி டாங்கே.
ஆரம்ப காலங்களில் சின்ன கதாபாத்திரங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், மெதுவாக முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவை அதிரவைக்கப் போகும் ‘வடசென்னை 2’ அப்டேட்..!! தனுஷ் – சிம்பு மோதலா? வெற்றிமாறன் மாஸ்டர் பிளான்..!
இன்று வரை அவருக்கு தனித்துவமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் “கன்னக்குழி அழகி” என ரசிகர்களால் அழைக்கப்பட்ட மற்றொரு நடிகையாக லைலா இருந்தது போலவே, ஸ்ருஷ்டி டாங்கேவும் தனது தனித்துவமான புன்னகை மற்றும் அழகான முகபாவங்களால் ரசிகர்களை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், ஸ்ருஷ்டி டாங்கே தனது கேரியரில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
‘மேகா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே, தொடர்ந்து ‘டார்லிங்’, ‘தர்மதுரை’, ‘கத்துக்குட்டி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக குடும்ப உணர்வுகள், காதல் மற்றும் இலகுவான கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
பெரிய ஹீரோயின் இமேஜ் இல்லாவிட்டாலும், இயல்பான நடிப்பால் மனதில் நிற்கும் நடிகையாக அவர் மாறினார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் ஸ்ருஷ்டி டாங்கே மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
தனது புதிய போட்டோஷூட்கள், பயண அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட ஸ்டைல் ஸ்டேட்மெண்ட்களை தொடர்ந்து ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
இதனால், அவருக்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர் வட்டமும் உருவாகியுள்ளது. ஒவ்வொரு புதிய பதிவும் சில மணி நேரங்களிலேயே வைரலாகும் அளவுக்கு அவரது புகைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படிங்க: Dance-ல மட்டுமில்ல Fight-லயும் புலி தான்..!! இதுமாதிரியான படம் தான் இனி எங்களுக்கு வேணும் - சமந்தாவை பாராட்டிய சிரஞ்சீவி..!