×
 

கனவில் வந்த திருவேற்காடு கருமாரியம்மன்..! மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்திய நடிகை நளினி..!

நடிகை நளினியின் கனவில் வந்த திருவேற்காடு கருமாரியம்மனுக்காக மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்தி இருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் நீண்ட காலமாக பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நளினி, நேர்த்தியான நடிகையாக  மட்டுமல்லாமல், ஆன்மீக பார்வையுடனும் வலுவான நம்பிக்கையுடனும் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணாக இருக்கிறார். மேலும் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தக்க வைத்து கொண்ட நடிகை நளினி, சமீபத்தில் தனது ஆன்மீக உணர்வை வெளிப்படுத்தும் வகையிலான செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இப்படி இருக்க, சென்னை திருவேற்காடு ஸ்ரீ காருமாரியம்மன் கோவிலில், நளினி மடிப்பிச்சை எடுத்து, தனது மனமார்ந்த காணிக்கையை அம்மனுக்கு செலுத்திய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் அம்மன் வழிபாடுகளில், காருமாரியம்மனை தாயாகக் கருதி வழிபடும் பெருமதிப்பிற்குரிய ஒரு கலாசாரம் இங்கு அதிகமாகவே உள்ளது. இப்படி இருக்க, இந்த கலாசாரத்தின் ஓர் அங்கமாகவே, நடிகை நளினி தன் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் அம்மனை வழிப்பட்ட பின்னர் தான் எடுப்பாராம். இப்படி "மடிப்பிச்சை எடுத்து அம்மனுக்குக் காணிக்கை செலுத்தும் நிகழ்வு  சாதாரண நிகழ்வு அல்ல என நளினி பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

அதன்படி அவர் பேசுகையில், "எனது இஷ்டதெய்வம், என்னுடன் உயிர் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம், எனது உற்சாகத்தின் ஊற்று திருவேற்காடு ஸ்ரீ காருமாரியம்மன் தான். சமீபத்தில் என் கனவில் அம்மன் வந்தார். வந்தவர் என்னிடம், 'நீ என்ன செய்யப் போகிறாய்?' எனக் கேட்டார். அந்த கேள்வி என்னை உடனடியாக நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத நிலையிலேயே, நான் என் மனதார அம்மனிடம் 'அம்மா, நான் மடிப்பிச்சை எடுத்து, என்னால் முடிந்த காணிக்கையை உமக்கு தருகிறேன்' என கூறினேன்" என தெரிவித்தார். நடிகை நளினி சொன்ன மடிப்பிச்சை என்பது பொதுவாக, தாழ்மையின் அடையாளமாகவும், தெய்வத்தின் திருவுளத்திற்கும் நம்முடைய அடக்கம் மற்றும் இறையருளை நாடும் முறையாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காதலும் கலாட்டாவும் கலந்த ஸ்வீட் படம் தான் 'பன் பட்டர் ஜாம்'...!  பிக் பாஸ் ராஜுவின் ஹீரோ அவதாரம் அல்டிமேட்..!

இப்படி இருக்க, ஒருவரது சுய மரியாதையை விலக்கி வைக்கின்ற இந்த செயலுக்கு பெரும் உள் அர்த்தம் அதிகம் உள்ளது. இதில் ஒரு வகையான தியாகமும், மனதார பக்தியும் அடங்கியிருக்கின்றன. நடிகை நளினி எடுத்த இந்த நடவடிக்கை, அவரது தனிப்பட்ட ஆன்மீக பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாகவே பார்க்கப்படுகிறது. திரையுலக பிரபலமாக இருக்கும்போது கூட, தங்கள் நம்பிக்கைகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் செய்யும் செயல்கள் மூலம் அவர் தனக்கான இடத்தை பலரது கவனத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், திருவேற்காடு ஸ்ரீ காருமாரியம்மன் கோவில், சென்னை மக்களின் ஆன்மீகக் கோட்டையாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. பக்தர்கள் எண்ணிக்கையற்ற பிரார்த்தனைகளோடு வரும் இந்த கோவிலில், அம்மன் தனது அருளை நம்பிக்கையுடன் தேடும் பக்தர்களுக்கு பூரணமாக வழங்குவார் என பலரும் சாட்சி கூறுகின்றனர். இதில் நளினியும் ஒருவராக இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இதையும் படிங்க: காதல் தோல்வி காரணமாக நடிகை தமன்னா எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share