×
 

கவர்ச்சிக்கு திஷா பதானி.. பாசத்துக்கு குஷ்பூ பதானி..! குழந்தையை காப்பாற்றி ஃபேமஸ் ஆன நடிகையின் தங்கை..!

குழந்தையை காப்பாற்றி உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகி இருக்கிறார் திஷா பதானியின் தங்கை குஷ்பூ பதானி.

தோனியின் பயோபிக் படமான எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியின் காதலியாக நடித்து பிரபலமானவர் தான் திஷா பதானி. இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்திலும் ஹீரோயினாக திஷா பதானி கலக்கி இருப்பார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ள திஷா பதானி தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக த்ரீடியில் 10 மொழிகளில் உருவாகி வெளியான கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். 

இந்த சூழலில், இந்த படத்தின் யோலோ பாடலை சிறப்பாக படமாக்க படத்தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருந்தனர். அதனால் பல இடங்களில் இந்த பாடல் படமாக்கப்பட்டது. இதனால் திஷா மற்றும் சூர்யா இருவரும் அடிக்கடி பல இடங்களுக்கு மாறி மாறி சென்று கொண்டு அலைக்கழிக்கப்பட்டனர். இதில் இந்த பாடலுக்காக திஷா மட்டும் 21 முறை உடைகளை மாற்றி மாற்றி சோர்வடைந்து விட்டாராம். இருப்பினும் படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தனது முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டு கல்கி படம் அளவிற்கு வரும் என நினைத்தார் திஷா. ஆனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஃபிளாப் ஆனது. 

இதையும் படிங்க: சமந்தா போட்ட ஒரு லைக்..! நாக சைதன்யாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்..!

இப்படி படங்களில் அசத்தும் நடிகையான திஷா பதானி எப்பொழுதும் பாரபட்சம் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து அனைவரது தூக்கத்தை கெடுப்பவர். இந்த சூழலில், குறைவான ஆடையால் பலரது கவனத்தையும் ஈர்த்த திஷாவை காட்டிலும் ஒரு குழந்தைக்கு செய்த உதவியால் அவரது தங்கை இன்று உலகம் முழூவதும் ஃபேமஸ் ஆகி பலரது பாராட்டையும்  பெற்று வருகிறார். 

அந்த வகையில், திஷா பதானியின் சகோதரி குஷ்பூ பதானி தனது அப்பாவுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல் காலையில் சாலை ஓரமாக நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்துள்ளார் குஷ்பூ. அப்பொழுது அருகில் இருந்த பழைய பாழடைந்த கட்டிடத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பதறிப்போன அவர் உள்ளே செல்ல முயன்றுள்ளார். ஆனால் வழி ஏதும் இல்லாததால் சுவரில் எகிறி குதித்து உள்ளே சென்றிருக்கிறார். அப்பொழுது ஒன்பது மாத கைக்குழந்தை அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர். அந்த குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்து சென்று முதலுதவி செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். 

மேலும், குழந்தையை பெற்றுக்கொண்ட போலீசார் அதனை மருத்துவமனையில் அனுமதித்து அந்த குழந்தையின் பெற்றோர் குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் குழந்தையை தைரியமாக காப்பாற்றிய குஷ்பூ பதானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

  

இதையும் படிங்க: கிரிக்கெட் வீரருக்கு பாராட்டு..! சிவகார்த்திகேயன் பதிவால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share