×
 

கோடை வெயிலில்.. பிகினியுடன் சுற்றும் நடிகை ஹன்சிகா..! வெளிநாட்டில் தாராள கிளாமர் வலம்வரும் போட்டோஸ்..!

நடிகை ஹன்சிகா கோடை வெயிலில் பிகினியுடன் சுற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நீண்ட காலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகைகளில் ஒருவராக ஹன்சிகா மோத்வானி திகழ்ந்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், தனது தனித்துவமான திரைநடிப்பாலும், அழகாலும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: டிவோஸ்க்கு பின்பு சிங்கிளாக ஜாலியாக மாறிய நடிகை ஹன்சிகா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

சமீப காலமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் அதிகமாக பேசப்பட்டு வந்தன. குறிப்பாக, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவர் கவனத்தின் மையமாக மாறினார்.

திருமணமாகி சில காலத்திலேயே தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஹன்சிகா, அண்மையில் சட்டப்படி விவாகரத்து பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து அவர் அளித்த பேட்டியும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

அந்த பேட்டியில், தனது வாழ்க்கை முடிவுகள் குறித்து மிகவும் தெளிவான மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த கருத்துகளை ஹன்சிகா வெளிப்படுத்தினார்.

“தவறான ரயிலில் ஏறிவிட்டால், அதில் இருந்து கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பதை விட இறங்கிவிடுவது தான் சிறந்தது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை,” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வார்த்தைகள், அவரது மனநிலையை வெளிப்படுத்தியதோடு, பலரிடமும் ஆதரவை பெற்றன. குறிப்பாக, வாழ்க்கையில் முன்னேற தைரியமான முடிவுகள் எடுக்க வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியதாக பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: தப்பான ட்ரெயின்ல ஏறிட்டேன்.. புடிக்கல இறங்கிட்டேன் simple..! விவாகரத்து பற்றி முதல் முறை பேசிய ஹன்சிகா மோத்வானி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share