லோகா ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷனா இது ..! ட்ரெண்டிங் லுக்கில் இருக்கும் போட்டோஷூட்..!
லோகா ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷனின் ட்ரெண்டிங் லுக்கில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகங்களில் சீரான வளர்ச்சியுடன் நடித்து வரும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், சினிமாவில் ஒரு தனி அடையாளத்தைக் கட்டியெடுத்திருக்கிறார்.
தந்தை பிரபல இயக்குநர், ஆனாலும் ‘நடிக்க வந்தது குடும்பம் காரணமாக அல்ல, கனவிற்காக’ என்ற அவரது பேச்சுகள், திரைத்துறையில் அவர் எடுத்து வந்த முடிவுகளை உணர்த்தும்.
இதையும் படிங்க: இதை உங்களிடம் நான் எதிர்பாக்கல..! ரசிகர்களை குறித்து காரசாரமாக பேசிய நடிகை கல்யாணி பிரியதர்ஷன்..!
கல்யாணியின் சினிமா பயணம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.
மொழி கடந்த நடிப்பு, தனித்துவமான கதைகளை தேர்வு செய்யும் திறன், பசுமை மின்னும் முகபாவனை, எல்லாவற்றிலும் அவர் தனக்கென ஒரு பயணத்தை நிரூபித்திருக்கிறார்.
கல்யாணி ப்ரியதர்ஷன், 1993-ம் ஆண்டு பிறந்தார்.
அவர் பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ப்ரியதர்ஷன் மற்றும் எழுத்தாளரும், முன்னாள் நடிகையுமான லிசியின் மகளாவார்.
சினிமா சூழ்நிலையில் வளர்ந்தாலும், கல்யாணி தனக்கென ஒரு தனி அடையாளம் கட்டியெடுக்க விரும்பினார்.
இணையத்தில் பலரும் நினைப்பது போல, அவர் நேரடியாக நடிக்கவே திரையுலகிற்கு வந்தவர் இல்லை.
ஆரம்பத்தில் அவரது கனவு தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவது தான். ஆனால் காலப்போக்கில் சினிமாவில் நுழைந்த அவர் தற்பொழுது கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: இதை உங்களிடம் நான் எதிர்பாக்கல..! ரசிகர்களை குறித்து காரசாரமாக பேசிய நடிகை கல்யாணி பிரியதர்ஷன்..!