×
 

மவுசு ஏறுது.. கவர்ச்சி கூடுது..!! தென்னிந்திய சினிமாவையே கண்ட்ரோலுக்கு எடுத்த கயாடு லோஹர்.. கையில 7 படங்கள் வச்சிருக்காராம்..!

நடிகை கயாடு லோஹர் தனது கையில் 7 பிரமாண்ட படங்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘டிராகன்’ திரைப்படம் மற்றும் சமீபத்தில் வெளியான ‘பவழ மல்லி’ மியூசிக் ஆல்பம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த நடிகை காயடு லோஹர், தற்போது தென்னிந்திய சினிமாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களில் கையெழுத்திட்டு வரும் அவர், தற்போது பிஸியான நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

இந்த நிலையில், அவரது அடுத்தடுத்து நடித்து வரும் 7 முக்கிய திரைப்படங்களின் முழு விவரங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பல மொழிகளில் படங்களை கைப்பற்றியிருப்பது, காயடு லோஹரின் வளர்ந்து வரும் மார்க்கெட் மதிப்பை தெளிவாகக் காட்டுகிறது என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயடு லோஹரின் அடுத்த பெரிய வெளியீடாக, ‘இதயம் முரளி’ திரைப்படம் ஜூலை 10 அன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகிறது.

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், காலங்களைத் தாண்டி செல்லும் ஒருதலைக் காதலின் வலியை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் அதர்வா, ஃபஹத் பாசில் மற்றும் பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காயடு லோஹரின் கதாபாத்திரம் கதையின் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஏற்கனவே இசை மற்றும் டீசர் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: அப்படி என்னதான் இருக்கு இந்த 'ஆல்பா' படத்துல..!! ஆர்வம் காட்டும் ரசிகர்கள்.. ஹவுஸ் புல் ஆகும் தியேட்டர்கள்.. முன்பதிவில் சாதனை..!

இதனைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் ‘இம்மார்டல்’ திரைப்படம் வெளியாகிறது. இதில் காயடு லோஹர் முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரு எமோஷனல் டிராமாவாகவும், அதே நேரத்தில் சமகால சமூக பிரச்சினைகளை பேசும் கதையாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் மற்றும் காயடு இணைப்பு ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மலையாள திரையுலகில், நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தில் காயடு லோஹர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆகஸ்ட் 20 அன்று வெளியாகவுள்ள இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். அத்துடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். அதிக ஆக்‌ஷன் காட்சிகளும், சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையும் கொண்ட இந்த படம் பான்-இந்தியா அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள படத்தின் மறுநாளே, ஆகஸ்ட் 21 அன்று காயடு லோஹரின் தெலுங்கு படம் ‘தி பாரடைஸ்’ வெளியாகிறது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் இந்த பீரியட் டிராமாவில் நானி மற்றும் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் காயடு லோஹர் கதாநாயகியாக நடித்திருப்பது தெலுங்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அளவிலான செட், காலப்பின்னணி கதை அமைப்பு மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரங்கள் என படம் முழுவதும் மாஸ் கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது.

தமிழில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தில் காயடு லோஹர் மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ‘வாழை’ படத்தின் தொடர்ச்சியாக பேசப்படும் இந்த படம், சமூக அரசியல் பின்னணியுடன் கூடிய வலுவான கதையைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றுவது இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘சூர்யா 48’ திரைப்படத்திலும் காயடு லோஹர் இணைந்துள்ளார். ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் டி.ஜே.ஞானவேல் மற்றும் சூர்யா இணையும் இந்த படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ப்ரொஜெக்டாக உருவாகிறது. இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை தவிர, வினய் கோவிந்த் இயக்கத்தில் உருவாகும் ‘தாரம்’ என்ற மலையாள திரைப்படத்திலும் காயடு லோஹர் நடிக்க உள்ளார். இதில் நிவின் பாலி மற்றும் நிகிலா விமல் ஆகியோருடன் இணைந்து அவர் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும், முன்னணி ஹீரோக்கள் மற்றும் டாப் இயக்குநர்களின் படங்களில் நடித்து வரும் காயடு லோஹர், தற்போது தென்னிந்திய சினிமாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் நாயகிகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

ஒரே வருடத்தில் இவ்வளவு பெரிய லைன்-அப் கிடைத்திருப்பது, அவரது மார்க்கெட் மதிப்பு மட்டுமல்லாமல், பல மொழிகளிலும் அவருக்கு கிடைக்கும் வரவேற்பையும் காட்டுகிறது என திரை வட்டாரங்கள் கூறுகின்றன. ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள ஒரே கேள்வி,  “இந்த 7 படங்களில் எந்த படம் காயடு லோஹருக்கு முதல் பான்-இந்தியா சூப்பர் ஹிட் கொடுக்கப் போகிறது?” என்பதே ஆகும்.

இதையும் படிங்க: குழந்தைங்க பார்த்தா நாங்க பொறுப்பில்ல..!! யாஷை சுற்றி வளைக்கும் நடிகைகள்.. Ladies & Ladies -Toxic ப்ரோமோ வைரல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share