நான் என்ன தப்பு செஞ்சேன்... போலீசார் பிடியில் "கூமாப்பட்டி பிரபலம்".. கதறும் இளைஞர்..!
போலீஸ் பிடியில் இருக்கும் கூமாப்பட்டி இளைஞர் தற்கொலைக்கு முயன்றதாக அவரே கொடுத்த வாக்கு மூலம்.
தற்பொழுது இணைய தளத்தை எடுத்தாலே அனைவரது கண்களில் விழும் ஒரே ஒரு விஷயம் என்றால் அதுதான் கூமாபட்டி. இன்ஸ்டாகிராம் ஃ பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளப் பகுதிகளிலும் கூமாபட்டி தான் நாங்க... நாங்க தான் கூம்பாப்பட்டி... இங்கு தண்ணீர் சர்பத்தை போல இருக்கும்... நீங்க இங்க கூமாபட்டிக்கு வாங்க சந்தோஷமா போங்க... என்ற வார்த்தைகளை சொல்ல, அந்த வீடியோ என்று ட்ரெண்ட் ஆனதோ அன்றிலிருந்து google மேப்பையே திணறடிக்கும் அளவிற்கு கூமாபட்டியை தேடி தேடி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
இப்படி கூமாபட்டிக்கு சென்று தங்களது பொழுதை கழிக்கலாம் என அனைவரும் செல்லும் பொழுது தான் கூமாபட்டியினுடைய நிலைமை மிகவும் மோசமாக இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது. ஒரு பேருந்து கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை வசதிகளை கொண்ட இந்த ஊரில் பொதுப்பணித்துறையினர் சுற்றுலா தலங்களைக் கடந்த ஐந்து வருடங்களாக முடக்கி இருப்பதாக அங்குள்ள மக்கள் அனைவரும் குற்றம் சாட்டினர். இப்படி பட்ட இந்த ஊர், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் தான் இன்று ட்ரெண்டிங்கில் உள்ள கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. குறிப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் தான் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அடிக்கிற வெயிலுக்கு ஆடையை குறைத்த நடிகை மீனாட்சி சவுத்ரி..! ட்ரெண்டிங்கில் ஹாட் போட்டோஸ்..!
இப்படி இருக்க தனியார் சேனலுக்கு கூமாப்பட்டி பிரபலம் கொடுத்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் " கூமாப்பட்டியை நான் வீடியோ எடுத்து வெளியிட்ட பின்பு பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. கலெக்டரே நேரில் வந்து மீண்டும் சுற்றுலா தளத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து தருகிறேன் என்று கூறினார். அதனை பார்த்த ஒரு சிலர் தனி ஒருவனாக போராடி வென்று விட்டாய் என என்னை பாராட்டினார்.. வேறு சிலரோ இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாவதற்காக இப்படி செய்திருக்கிறான் என சொல்லி என்னை வேதனைப்படுத்துகின்றனர்.. கூமாப்பட்டி குறித்து நான் பேசிய வீடியோ வெளியான பின்பு அநேகர் ஆசை ஆசையாக கூமாப்பட்டிக்கு வந்து வெறுங்கையோடு திரும்பி செல்வதை பார்த்து எனக்கு வேதனையாக இருக்கிறது.
அதிலும் ஒரு இளைஞர் 30 ஆயிரம் ஃபாலோவர்ஸ்களை instagramல் வைத்திருக்கிறார் அவர் என்னுடைய வீடியோக்களை பதிவு செய்து கூமாபட்டிக்கு வருவதற்கு ஆயிரம் ரூபாய் கேட்டு கொண்டிருக்கிறார். இதனை நான் காவல்துறையினரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறேன்.. மேலும் கூமாபட்டியை நான் ஃபேமஸ் ஆக்க வேண்டும் என்று தான் ஒரு வருடமாக உழைத்தேன். அதற்கு காரணம் என்னுடைய நண்பர்கள்... ஒரு நாள் குற்றாலத்திற்கு குளிக்க செல்ல வேண்டும் என அனைவரும் பிளான் போட்டோம். அப்பொழுது ஒரு நபருக்கு ரூ.600 வேண்டும் என சொன்னார்கள். ஆனால் என்னிடமோ ரூ.400 மட்டுமே இருந்தது. ஆதலால் எனக்கு ஒரு ரூ.200 போட்டு குற்றாலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என நண்பர்களிடம் கேட்டபொழுது பணம் இருந்தால் வா.. இல்லை என்றால் வராத என சொல்லி பேருந்தில் இருந்து இறக்கி விட்டார்கள்.
அன்று எடுத்த சபதம் தான் எனது ஊரிலும் குற்றாலம் போல் அருவி உள்ளது. இதனை நான் ஃபேமஸ் ஆக்கியே தீருவேன் என்று முடிவெடுத்து உழைத்தேன். இன்று சாதித்து இருக்கிறேன். நான் 'பி.எட்' படித்திருந்தாலும் எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று தான் ஆசை. அதனால் நானும் எனது நண்பனும் ஒன்றாகவே போலீஸ் ட்ரைனிங் இல் இணைந்தோம் எனக்கு ஒரு மார்க்கில் வாய்ப்பு போனது இருப்பினும் நான் முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் எனது தம்பிக்கும் வேறொருவக்கும் சண்டை ஏற்பட்ட பொழுது என்னையும் எனது தம்பியையும் கைது செய்து அழைத்து சென்ற போலீசார்.. எங்கள் மீது கேஸ் போட்டு எங்களுடைய வாழ்க்கையை அழித்து விட்டனர். இன்று வரை அந்த கேசினால் நான் படாத அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறேன்.
பி.எட் முடித்த நான் ஆசிரியர் வேலைக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு காவல் துறையினர் செய்ததால் மன உளைச்சல் தாங்க முடியாமல் கூமாபட்டியில் உள்ள பிளவுகல்லின் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என அழுதபடி ஓடினேன். அங்கு மலையின் மீது நின்று நான் ஒரு கணம் யோசித்த பொழுது, நமக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஆனால் நம் மீது எப்படி இப்படி ஒரு தவறு விழுந்தது என் வாழ்க்கையை அழிந்துவிட்டது என யோசித்துக் கொண்டிருந்த பொழுது, யாரோ ஒருவர் அங்கு வடையை சாப்பிட்டு வைத்திருந்தார் அதன் கீழ் ஒரு பேப்பர் இருந்தது. அதில் விவேகானந்தரின் வாசகங்களில் இருந்தது. அந்த வாசகத்தில் 'அனைத்து ஆற்றலும் உனக்குள்ளே தான் இருக்கிறது. நீ நினைத்தால் எல்லாம் சாதிக்க முடியும்' என்ற வரிகள் இருந்ததை பார்த்து தான் அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டு மீண்டும் வந்தேன்.
அதுவரை எனக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட கிடையாது. என் வாழ்க்கையை காப்பாற்றியது சுவாமி விவேகானந்தர் மட்டும்தான். நான் சொல்லும் வார்த்தையே விவேகானந்தருடைய வார்த்தை தான் ஏனெனில் 'இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே நான் தான்... நான் தான் ஒட்டுமொத்த பிரபஞ்சமே... என்று சொல்வதை தான் மாற்றி, கூமாபட்டியே நாங்க தான்.... நாங்க தான் கூமாபட்டி... என்ற டயலாக்காக வைத்து பேசி வருகிறேன். கிட்டத்தட்ட 15 மாடு மற்றும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் வேலையில் தான் இப்படிப்பட்ட தான ரீல்ஸ்களை நான் எடுத்துப் போடுவேன்.. மேலும் இன்று என்னுடைய வீடியோக்கள் வைரலாக காரணம் என்னுடைய சுவாமி விவேகானந்தர் மட்டும்தான்" என மகிழ்ச்சியுடன் சொன்னார்.
இதையும் படிங்க: உங்கள நான் படம் பாக்க சொன்னனா.. இஷ்டம் இருந்தா பாருங்க..! நடிகை ராஷ்மிகா பேச்சால் பரபரப்பு..!