ட்ரெண்டிங் உடையில் கலக்கும் நடிகை மாளவிகா மோகனன்..!
நடிகை மாளவிகா மோகனன் ட்ரெண்டிங் உடையில் கலக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"அந்த கண்ணை பார்த்தாக்க காதல் தானாக தோன்றாத" என்ற பாடல் நடிகைக்கு பொருந்தும் என்றால் அவர் தான் மாளவிகா மோகனன்.
அந்த அளவிற்கு உயரமும் அழகும் உடையவர். இவர் நடித்த தமிழ் படங்களின் மூலமாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகையில் அழகிய சேலையில் மின்னும் நடிகை மாளவிகா மோகனன்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் இளையதளபதி "விஜய்" உடன் நன்றாக நடித்து இருப்பார்.
அதிலும் அப்படத்தில், "நீங்கள் என்னை அழைத்த பொழுது, ஏதோ கேண்டில் லைட் டின்னருக்கு தான் அழைத்தீர்கள் என்று நினைத்தேன்" என சுட்டித்தனமாக டைலாக் பேசி இருப்பார் அதற்கு நடிகர் விஜயும் கலாய்த்து இருப்பார்.
அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்திருக்கும் இவரை எதற்காக லோகேஷ் கனகராஜ் வைத்தார் என்ற சந்தேகமும் பலருக்கு வரும், அந்த அளவிற்கு படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவார்.
இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த சூழலில், தற்பொழுது அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஹாட் லுக்கில் மிரள வைக்கும் நடிகை மாளவிகா மோகனன்...!