என் அறிவுக்கண்ணை திறந்தவர் எச்.ராஜா.. பிராமணர்களை தவறாக நினைத்து விட்டேன்.. இயக்குநர் மோகன் அந்தர்பல்டி..!
திடீரென ஹெச் ராஜாவை புகழ்ந்து பேசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குநர்.மோகன்.ஜி.
சர்ச்சைகளுக்கு பெயர்போன ஃப்ளூ சட்டை மாறனுக்கே டஃப் கொடுக்கும் இயக்குனர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் இயக்குனர் மோகன்.ஜி , எப்படி தமிழ் சினிமாவில் ஜாதிகள், பரம்பரை, வழிபாடு என ஒடுக்கப்பட்ட சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்து காட்டும் வகையில் படங்களை இயக்கி வரும் இயக்குனர்களான பா.ரஞ்சித், வெற்றிமாறன், சமுத்திரக்கனி, சசிகுமார் போன்றவர்கள் வரிசையில் புதியதாக இடம்பெற்று இருப்பவர்தான் மோகன்.ஜி. இவர் எடுத்த படங்கள் அனைத்தும் ஒருவித கருத்தை முன்வைப்பதாகவே இருக்கும். அதனால் இவரது படங்கள் எப்பொழுது வெளியானாலும் மக்கள் ஆர்வமாக பார்க்க செல்வர்.
இப்படி இருக்க, "பழைய வண்ணாரபேட்டை" என்ற திரைபடத்தை 2016ம் ஆண்டு இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதனை அடுத்து, 2020ம் ஆண்டு 'திரௌபதி' என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்குரிய படமாக அனைவரால் பார்க்கப்பட்டாலும், இத்திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. பின் இயக்குநர் 'செல்வராகவனை வைத்து "பகாசூரன்" என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று தந்தது. இப்படி இவரது எந்த படங்கள் வெளியானாலும் அனைத்திலும் இவர் மீது சாதிய முத்திரை குத்தப்பட்டு வந்தது. ஆனாலும் அதைப்பற்றி துளிகூட கவலைப்படாமல் இன்றுவரை தன்னுடைய சினிமா வாழ்க்கையில் படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதையும் படிங்க: வைரலான அந்தரங்க வீடியோ..! ஒரே ஸ்டோரியில் அனைவரது வாயை அடைந்த பிரபல நடிகை..!
இவரது படங்களால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவரும் மோகன், தனது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்தும் சர்சையில் சிக்கி கொள்வார். இப்படி தான் சமீபத்தில், "திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில்", பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், "பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய்" உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை பார்த்து கொதித்து போன இயக்குநர் மோகன்.ஜி, உடனே தனது எக்ஸ் தல பக்கத்தில்,
"எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்." என பதிவிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக வந்த புகாருக்கு தனியார் சேனலில் கேள்விகள் கேட்டு கோவில் நிர்வாகத்தை உடைத்து எடுத்தார்.
அவ்வளவு தான், இந்த பதிவை பார்த்த திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரிந்து வரும் கவியரசு என்பவர், தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொய்யான செய்தி பரப்பி இருக்கிறார் மோகன் என காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், கடந்த 21.09.2024-ஆம் தேதி இயக்குநர் மோகன்.ஜி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் போராடி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இப்படி சர்ச்சைகளில் சிக்கி தவித்து வந்தாலும் படம் எடுப்பதில் இன்றும் முனைப்புடன் இருந்து வருகிறார் மோகன்.ஜி. இப்படி இந்து நாகரிகம், மக்களை ஏமாற்றி வருகிறார்கள் குருமார்கள் என கட்டமாக பதிவு செய்து வந்த மோகன்.ஜியின் அறிவுக்கண்ணை திறந்து வைத்திருக்கிறார் ஒருவர். அதன்படி, தமிழகத்தில் தமிழிசை சௌந்தரராஜனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது, அவருக்கு அடுத்தபடியாக பாஜக என்று பெயர் வந்தால் அனைவரது நினைவுக்கு வருபவர் ஹச்.ராஜா. இவர் தனது பேச்சின் ஜாலாக்கினால் அனைத்தையும் சாதிக்க கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்படி இருக்க, ஜெயிலுக்கு சென்று வந்த இயக்குனர் மோகன்.ஜி-யை ஹெச்.ராஜா மிரட்டினாரா அல்லது பேசினாரா என தெரியவில்லை. பல நாட்களாக கோவில் குருக்களை பற்றி பேசிவந்தவர் இன்று திடீர் பல்டி அடித்து "ஹெச்.ராஜா என்ற ஒருவரை என் வாழ்நாளில் சந்திக்காமல் இருந்திருந்தால் நானும் 'பிராமணர்கள்' என்றாலே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை நம்பிக் கொண்டுதான் இருந்து இருப்பேன் என்றும் ஹெச்.ராஜாவை போல் பலர் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை என்றும் தமிழ்நாட்டில் அழிந்து வரும் இனமாக பிராமணர்கள் இனம் உள்ளது அதனை பாதுகாக்க வேண்டும்" எனவும் கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறார் மோகன்.ஜி.
இதனை பார்த்த நெட்டிசன்கள், உள்ள என்ன நடந்ததோ, பாவம் இப்படி பேசுகிறார். கொஞ்சம் பொறுங்க பாய் இதற்கு "ஃப்ளூ சட்டை மாறன்" என்ன சொல்கிறார் என பாப்போம். என்று ப்ளூ சட்டை எக்ஸ் பக்கத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதையும் படிங்க: அந்தரங்க வீடியோ... சீரியல் நடிகையை சீரழித்தது யார்..? போட்டோவை பகிர்ந்த ஸ்ருதி நாராயணன்..!