அடுக்கி வைத்த டயர்களுக்கு மத்தியில் ஒரு மாடர்ன் நடிகை..! ரவீனா தாஹா-வின் கலக்கல் போட்டோஸ் இதோ..!
நடிகை ரவீனா தாஹா, அடுக்கி வைத்த டயர்களுக்கு மத்தியில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ‘தங்கம்’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமான நடிகை ரவீனா தாஹா, தற்போது தனது புதிய மாடர்ன் லுக் புகைப்படங்களால் சமூக வலைதளத்தை குலுக்கி வருகிறார்.
சீரியல், சினிமா, வெப் தொடர்கள் என பல்வேறு தளங்களில் திறமையாக நடித்துவரும் ரவீனா, தற்போது ஃபேஷன் உலகிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
இதையும் படிங்க: அசத்தும் அழகில் கடற்கரையின் நிழலில்..! கவர்ச்சியின் உச்சத்தில் சீரியல் நடிகை ரவீனா..!
ரவீனா தாஹா தனது சீரியல் வாழ்க்கையை சன் டிவியின் ‘தங்கம்’ தொடரில் தொடங்கினார். அடுத்து, ஜீ தமிழின் சூப்பர் ஹிட் தொடரான ‘பூவே பூச்சூடவா’ வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெரிய வரவேற்பைப் பெற்றார். இவரது சிறந்த நடிப்பு திறமையால் இந்த சீரியல் பலரது மனதில் இடம் பெற்றது.
அதன் பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மௌன ராகம் 2’ தொடரில் நடித்து, இளம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து, வெப் தொடர்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி, டிஜிட்டல் தளத்திலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தைக் கொண்டுள்ளார்.
சின்னத்திரையுடன் சேர்ந்து, ரவீனா பல படங்களிலும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடனத்தில் தேர்ச்சியும் ஈர்க்கும் உடல் மொழியும் கொண்ட அவர், பல நடன நிகழ்ச்சிகளில் மற்றும் ஸ்டேஜ் ஷோக்களிலும் பங்கேற்று பாராட்டுகளை பெற்றவர்.
கடைசியாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ‘சிந்து பைரவி’ தொடரில் கமிட்டானார். தொடர் ரசிகர்கள் அவர் நடிப்பை எதிர்பார்த்து காத்திருந்த சமயம், சில தனிப்பட்ட காரணங்களால் அவர் தொடரில் இருந்து விலகினார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஸ்டைலிஷ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, அவர் வெளியிட்டுள்ள மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: இது அல்லவோ நட்பு..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நண்பன் கமல்ஹாசன் கொடுத்த ஷாக்கிங் பரிசு..!