என் மகளுக்கு காதல் வராது.. அழகான ஜோவிகாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..! வனிதா ஓபன் டாக்..!
என் மகள் வாழ்க்கையில் காதலிக்க மாட்டார் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பார்க்க அழகாகவும் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் இருக்கும் இவர்தான் நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகளான ஜோவிகா விஜயகுமார். இதுவரை கல்லூரி வாசலில் தனது காலடித்தடத்தை பதிக்காத ஜோவிகா படிக்காத மேதையாகவே தற்பொழுது இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார் என்றால் அவரது உழைப்பை பாராட்டியே தீர வேண்டும்.
இப்படி இருக்க கிரிக்கெட்னா ஸ்டெம்ப் இருக்கணும் சினிமா நான் அதுல எங்க அம்மா இருக்கணும் என ஒவ்வொரு முறையும் தன்னுடைய செயல்களில் தனது தாயாரை பிரதிபலித்தவர் தான் ஜோவிகா விஜயகுமார். இவர் என்னதான் வனிதா விஜயகுமாரின் மகளாக இருந்தாலும் இன்ஸ்டா மற்றும் youtubeகளில் இவருக்கு ஃபேன் ஃபாலோவர்ஸ்கள் ஜாஸ்தியாகவே இருந்தனர். இப்படிப்பட்ட இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்-7ல் போட்டியாளராக களம் இறங்கினார். தாயைப்போல் சேயை என்பதை போல அம்மா வனிதா பத்தடி பாய்ந்தால் ஜோவிகா 16அடி பாய்ந்தார். இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் பிக்பாஸ் வீட்டில் இடி மாரி இறங்கியது.
இதையும் படிங்க: இந்த தீபாவளிக்கு விஜய் வரலைன்னா என்ன.. நம்ப லெஜெண்ட் சரவணனே வராரு..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!
ஒருமுறை வாழ்க்கையில் ஜெயிக்க படிப்பு என்பது அவசியமே இல்லை என இவர் கூறியது மிகவும் ட்ரெண்டானது. அப்பொழுது அவர் சொல்லும் பொழுது ஆமாம்..நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு முக்கியமில்லை என்று அவர் கூற அவருக்கு எதிர்ப்புகளும் அதிகமாக கிளம்பியது. இப்படிப்பட்ட ஜோவிக்கா எங்கு சென்றாலும் ஆடை என்கின்ற விஷயத்தில் சிக்கித் தவிப்பவராகவே இருக்கிறார். இவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வெளியே வந்தால் உங்களுக்கு பாரம்பரிய உடை நாகரிகமே இல்லையா என சிலர் கேட்பதும், சரி.. பாரம்பரிய உடையான தாவணி பாவாடை அணிந்து வந்தால் இப்படியா தாவணி பாவாடை அணிந்து வருவார்கள் என கேட்பவர்களும் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் சூடான ஜோவிகா, முதலில் பாரம்பரிய உடை என்றால் என்ன? என்பதை எனக்கு சொல்லுங்கள் பிறகு நான் அதற்கு ஏற்றபடி ஒரு ஆடையை புதியதாக வடிவமைத்து அணிந்து கொள்கிறேன் என காட்டமாக தெரிவித்தார்.
இப்படி இருக்க தற்பொழுது தனது அம்மாவான வனிதா விஜயகுமாரை வைத்து அருமையான திரைப்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார் ஜோவிகா. "மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்" என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கும் இவரின் இந்த திரைப்படத்திற்கான போஸ்டரை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார். வரும் ஜூலை 4-காம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு பல கட்ட ப்ரொமோஷன்கள் அதிரடியாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தனது மூத்த மகளான ஜோவிகாவை குறித்து பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.
அந்த வகையில் அவர் பேசுகையில், " எனது மகள் ஜோவிகா.. இன்று இயக்குனராகி இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் என் மகள் அவள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவாள். மேலும் என் மகள் யாரையும் லவ் பண்ணவே மாட்டா... இதனை நான் அடித்து சொல்லுகிறேன். ஏனெனில் காதல் வலி என்பதை குறித்து என் வாழ்க்கையின் மூலம் அவள் அதிகமாகவே கற்றுக் கொண்டிருக்கிறாள். ஏன்..? சில சமயங்களில் நான் உடைந்து போய் அமரும் பொழுது எனக்கு அட்வைஸ் கொடுத்தவரே அவர் தான். அவர் அட்வைஸால் தான் இன்று நான் தெளிவாக இருக்கிறேன். நல்லவேளை என் மகளை நான் காலேஜுக்கு அனுப்பவில்லை..
அனுப்பி இருந்தால் காதல் என்ற பெயரில் அவளுடைய கெரியரை அனைவரும் கெடுத்து இருப்பார்" என தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் பிரபல நடிகை திடீர் மரணம்..! புலம்பி அழும் ரசிகர்கள்... நடந்தது என்ன..?