மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிய ஸ்மிருதி இரானி… வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!
நடிகையும் அரசியல்வாதியுமான ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தொலைக்காட்சித் தொடரான 'கியூங்கி சாஸ் பி கபி பாஹு தி'யின் புதிய அத்தியாயம் குறித்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக கியூங்கி சாஸ் பி கபி பாஹு தி தொடர் முதன்முதலில் 2000 முதல் 2008 வரை ஒளிபரப்பானது. அப்போது அதில் ஸ்மிருதி இரானி நடித்து வந்தார். இந்த சீரியல் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இந்திய தொலைக்காட்சியில் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது.
2014 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஒரு அமைச்சராக ஸ்மிருதி இரானி பணியாற்றியதால் அந்த சீரியலில் இருந்து அவர் விலகினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், பாஜகவால் 2014இல் களமிறக்கப்பட்டவர் ஸ்மிருதி இரானி. இந்தி நாடக நடிகையாக அறியப்பட்ட இவர் ஹிந்தி மாநிலங்கள் அனைத்திலும் பிரபலம் என்பதால், ராகுலுக்கு எதிராக பாஜக நிறுத்தியது.
இதையும் படிங்க: நயன்-க்கு வந்த அடுத்த தலைவலி.. ஆவணப்பட வழக்கில் மேலும் ஒரு சிக்கல்..!
2014 தேர்தலில் ராகுலை வீழ்த்தி ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். வெற்றி பெற்று ஒரு அமைச்சராக ஸ்மிருதி இரானி பணியாற்றியதால் அந்த சீரியலில் இருந்து அவர் விலகினார். ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். இதை அடுத்து அவர் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
கியூங்கி சாஸ் பி கபி பாஹு தி சீரியலின் புதிய அத்தியாயம் குறித்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஸ்மிருதி இரானி நடித்து இருக்கிறார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் அவர் இனி சில வருடங்களுக்கு நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராய் லட்சுமி நடத்திய கலக்கல் போட்டோ ஷூட்..! இணையத்தில் உலா வரும் நச் கிளிக்ஸ்..!