டீசென்ட்-ல அப்பா டாப்பு.. இன்-டீசன்ட்ல பையன் பிளாப்பு..! ரசிகர்களுக்கு ஆபாச செய்கை.. சிக்கிய ஷாருக்கானின் மகன்..!
நடிகர் ஷாருக்கானின் மகன், ரசிகர்களை நோக்கி ஆபாச சைகை காட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்குள் உள்ள பிரிகேட் ரோட் எப்போதும் நவீனத்துவமும் இரவு வாழ்க்கையும் கலந்த பீக் ஸ்பாட்டாகவே திகழ்கிறது. இதே ரோட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கேளிக்கை விடுதி (பப்) ஒன்றின் திறப்பு விழா நவம்பர் 28-ம் தேதி நடைபெற்றது.
நகரின் இளைஞர்கள், பிரபலங்கள், சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் என பலரின் கவனத்தை ஈர்த்த இந்த விழாவில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இப்படி இருக்க ஆர்யன் கான் வருவதாக அறிவிக்கப்பட்டது முதல் பிரிகேட் ரோட்டில் ரசிகர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இளம் பெண்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள் ஆர்யனை ஒருமுறை நேரில் பார்க்கும் ஆசையுடன் தெருவை நெரிசலாக்கினர். பலரும் மொபைல் கேமராக்களுடன் நடப்பதை பதிவு செய்யத் தயாராக இருந்தனர். இந்த சூழலில் விழா நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் அதிகரிக்க, அவர்களைக் கவனித்து ஆர்யன் கான் கைகளை அசைத்து வாழ்த்தினார்.
ஆனால் இதையே சிலர் “ஆபாச சைகை” என அடையாளப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்கள். அந்த காட்சிகள் வைரலாகி, சர்ச்சைக்கு துவக்கமாயின. சில நெட்டிசன்கள் வீடியோவை பார்த்து “ரசிகர்களை அவமதிக்கும் நடத்தை” என கண்டித்தும், சிலர் இது “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சாதாரண gesture” மட்டுமே எனவும் கூறினர். அந்த தருணத்தில் ஆர்யன் கானின் அருகே, மாநில மந்திரி ஜமீர் அகமத் கான், அவரது மகன், ஹாரீஸ் எம். எல். ஏ.வின் மகன் என இவர்கள் அனைவரும் நின்றிருந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களிலும் புகைப்படங்களிலும் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த லுங்கி டான்ஸுக்கு தயாரா மக்களே.. மாஸ் காட்டும் நெல்சன்..! ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தில ஷாருக்கானாம்..!
விமர்சகர்கள், “அரசு தரப்பினர் அருகில் இருந்தும் எவரும் எந்த வித எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக இருந்தது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது” என கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் பரபரப்பான போதிலும், அசோக்நகர் போலீஸ் உறுதிப்படுத்திய எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளிவரவில்லை. பொதுவாக, “ஆபாச சைகை”, “பொது இடத்தில் ஒழுங்கு மீறல்” போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் குற்றப் பிரிவுகள் 294, 268 போன்றவை பொருந்தக்கூடியவை.
ஆனால் போலீஸ் இதுவரை, புகார் பதிவு செய்ததா?, விசாரணை நடத்தத் திட்டமா?, சமூக வலைதள வீடியோக்காட்சி துல்லியமானதா?, என்ற எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை. இதுவே “போலீஸ் ஏன் மௌனமாக இருக்கிறது?” என்ற கேள்வியை பலரிடத்திலும் எழச் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. மேலும் புதிய பப் நிர்வாகம் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை.
அவர்களிடம் ஊடகங்கள் விளக்கம் கேட்டபோது, “இது எங்கள் நிகழ்ச்சியுடன் தொடர்புடையது அல்ல, தனிநபர் நடத்தைக்கு நாங்கள் பொறுப்பில்லை” என்று மட்டுமே கூறியதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த செய்தி தற்போது, சமூக வலைதள விவாதம், ரசிகர்களின் மோதல், ஊடகங்களில் கவனம், பிரபலங்களின் நடத்தை குறித்து எழும் பெரிய கேள்விகள் என பல பரிமாணங்களில் பரவியுள்ளது.
ஆனால் அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது உறுதியான விளக்கம் வராத வரை, இந்த விவகாரம் குறித்த அனைத்தும் பரவி வரும் தகவல்கள், குற்றச்சாட்டுகள், மற்றும் பார்வையாளர்களின் தனிப்பட்ட கருத்து பகிர்வு மட்டுமே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: அழகியே.. Marry me...! சீரியலில் சிம்பிளா இருந்த ஹசின்-ஆ.. இப்படி சேலையில் கவர்ச்சியா இருக்காங்க..!