"எனது மனைவியின் கையை தொட்டுட்டாங்க".. உதவி செய்ய போய் சர்ச்சையில் சிக்கிய இர்பான்..!
உதவி செய்ய சென்ற இர்பான் சர்ச்சையில் சிக்கிய பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
உழைக்கும் காலம் மாறி போய் தற்பொழுது வேலைக்கு எல்லாம் செல்ல வேண்டாம் நண்பா, வீட்டில் இருந்தபடியே ரீல்ஸ் போட்டு சம்பாரிக்கலாம் என ஒரு கூட்டம் அலைந்து கொண்டு உள்ளது. அதிலும் குறிப்பாக வீட்டிற்கு வருபவர்களை ஃபிராங் செய்வது, மனைவி கணவனை அடிப்பது, குழந்தைகள் அப்பாவை அடிப்பது, கர்ப்பமாக இருப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, காதல் செய்வது, குடும்ப காரியங்களை வெளியே சொல்வது, வீட்டில் ஹால் முதல் கக்கூஸ் வரை வீலாக் செய்வது, வெளியூர் பயணம், பைக் ரைட், கார் ரைட், கப்பல்ஸ் ரைட், ஹனிமூன் ரைட் என பல இளசுகள் முதல் பெருசுகள் வரை இணையத்தின் மோகத்தில் சுற்றி திரிந்து வருகின்றனர்.
இப்படிப்பட்டவர்கள் வரிசையில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அதிரடியான யுடியூபர் என்றால் முதலில் அனைவரது நினைவுக்கு வருபவர் போலீசுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் மிகவும் பிடித்த டிடி.எஃப்.வாசன் தான். பிரபல பைக் யுடியூபராக மாஸாக வலம் வந்த மனுஷனை தமாசாக மாற்றி உட்கார வைத்துள்ளனர் காவல்துறையினர்.
அவர் பேசினால் ஜெயில், நடந்தால் ஜெயில், பைக் ஓட்டினால் ஜெயில், கார் ஓட்டினால் ஜெயில், ஏன் சாமி கும்பிட போனால் கூட வீட்டிற்கு செல்ல மாட்டார். அப்படியே காவல் நிலையத்திற்கு தான் செல்வார். அந்த அளவிற்கு மஞ்சு வீரானாய் சாதிக்க நினைத்தவரை மாவுக்கட்டு வீரனாக மாற்றி உட்கார வைத்தது இந்த இணையதளம். குறிப்பாக இணையதளம் ஒருவரை எந்த அளவிற்கு உயர்த்துமோ அதே அளவிற்கு கீழேயும் தள்ளி விடும் என்பதற்கு உதாரணம் தான் டிடி எஃப்.
இதையும் படிங்க: எம்புரானுக்கு எதிராக மல்லுக்கட்டும் தமிழக விவசாயிகள்.. முல்லைப்பெரியாறு அணை குறித்து இஷ்டத்துக்கு பேசுவதா..?
அவரை போலவே சர்ச்சையில் பிறந்து, சர்ச்சையில் வளர்ந்து தற்பொழுது சர்ச்சையிலேயே வாழ்க்கையை கழித்து வருபவர் தான் பிரபல யுடியூபரான இர்பான். பார்க்க குக்வித் கோமாளி தாமு போல் ஜைஜான்டிக்காக இருக்கும் இவர், ஆரம்பத்தில் உணவுகளை பற்றி பேசி வீடியோக்களை பதிவு செய்து வந்தார். சிறிய பூச்சி முதல் பெரிய முதலை வரை இவர் சாப்பிடாத உணவே இல்லை. எப்படி சினிமாவில் 'ப்ளூ சட்டை மாறன்' ரிவியூ செய்கிறாரோ, அதேபோல் உணவுக்கு ரிவியூ செய்து இன்று பணக்காரனாக நிற்பவர் தான் இர்பான்.
இப்படி சாப்பாட்டில் வீடியோக்களை பதிவு செய்ய ஆரம்பித்தவர், அடுத்ததாக கார்களை குறித்து பேசி அதனையும் பதிவிட ஆரம்பித்தார். அதன்பின் மஞ்சள் கலர் அரக்கனான விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை வாங்கி அனைவரையும் திக்குமுக்காட வைத்தார். அதன்பின் அந்த கார் சரியில்லை என கூறி வேறொரு விலையுயர்ந்த காரை வாங்கி அதில் பயணம் செய்தபடியே வீலாக் எடுத்து வருகிறார்.
இப்படி அருமையாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்வில் நிறைய விருதுகள், பட்டங்கள், ரசிகர்கள் என பலர் வர தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் குக்வித் கோமாளியிலும் கலந்து கொண்டு கலக்கினார். இப்படி பிரபலமானவரின் வளர்ச்சியை கண்களுக்கு தெரிந்து ஒரு சிலர் பார்த்தாலும், அவருடைய கண்ணுக்கு தெரியாத பல கோடி மக்கள் அவரை வறுத்தெடுத்தும் வந்தனர்.
இப்படி புகழின் உச்சிக்கு சென்றவர் படிப்படியாக அதிலிருந்து இறங்க ஆரம்பித்தார். முதலில் பிரபல தனியார் ஹோட்டல் உணவு பிரச்சனையில் சிக்கினார். அந்த உணவகத்தில் கெட்டுப்போன உணவுகளை பரிமாறுவதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், இர்பானின் ரிவியூவை நம்பி ஹோட்டலுக்கு போனால் அங்கு கெட்டுப்போன இறைச்சிகளை கொடுக்கிறார்கள் என்ற புகார் வர, இணையவாசிகளும் செய்தியாளர்களும் இர்பானை வசைபாடி தீர்த்தனர்.
இது போக, தனது திருமணத்திற்கு பிறகு அமைதியாக இல்லாத இர்பான் துபாய்க்கு சென்று அங்கு தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ அவரை கைது செய்யவேண்டும் என்ற கோஷங்கள் தமிழகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் வலுக்க தொடங்கியது. பின்பு பல அரசியல் கட்சி தலைவர்களின் தலையிட்டால் அதில் இருந்து தப்பிய இர்பான். இன்று பல பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் நேர்காணல் செய்யும் அளவிற்கு வளர்ந்து உள்ளார்.
இந்த நிலையில், ரம்ஜானை முன்னிட்டு நானும் எனது மனைவியும் ஏழைகளுக்கு உதவ போகிறோம் என சென்ற இர்பான் தற்பொழுது மீண்டுமொரு சர்ச்சைகளில் சிக்கி இணையவாசிகளின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். அதன்படி, ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவ போகிறேன் என தனது மனைவியுடன் உடைகள் வாங்கிக் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் மக்களுக்கு உதவிகளை பொருளாக செய்துள்ளனர்.
ஆனால் அதில் எந்த தவறும் இல்லை. அதில் சர்ச்சையாக மாறிய விஷயம் என்னவென்றால், இவரும் இவரது மனைவியும் காருக்குள் அமர்ந்து கொண்டே அவர்கள் கொண்டு வந்த உடைகள் மற்றும் உதவிப் பொருட்கள் அடங்கிய, பைகளை அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி இவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்குவதற்காகவும், கைக்கு எட்டிய பொருள் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்தில் காருக்குள் கைகளை விட்டும் மக்கள் வாங்கியுள்ளனர். இதனை பார்த்த இர்பான், டேய் விடுங்கடா, இது என் பொண்டாட்டிடா என கூறி காட்டமாக பேசியிருக்கிறார். மேலும், காருக்குள் கைகளை விடவேண்டாம் எனவும் உதவிப் பொருளை வாங்கும் சிலர் எனது மனைவியை தொட்டு விட்டார்கள் என்றும் அவரது கைகளை பிடித்து இழுத்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருந்திருக்கலாம் இர்பான். உதவி செய்ய முன்வந்த நீங்கள் பொருட்களை காரில் இருந்து இறங்கி கொடுத்திருக்கலாம். அதேபோல் காருக்குள் இல்லாமல் வெளியே இருந்து உதவிகள் செய்திருந்தால் உதவி பெருபவர்கள் உங்கள் பொன்னான கைகளை தொட்டிருக்க மாட்டார்கள். இப்படி கூறுவதற்கு இந்த உதவியை நீங்கள் செய்யாமலேயே இருந்திருக்கலாம். என நெட்டிசன்கள் தங்கள் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிளாமர் லுக்கில் நடிகைகளுக்கு டஃப் பொடுக்கும் குஷ்பூ மகள்..!