×
 

நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் திருப்பம்..! சாட்சிகளிடம் விசாரணை செய்ய திட்டம்..!

நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காமாட்சி பாளையா போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களில் முக்கிய குற்றப்பத்திரிகை சந்தேக நபர்களாக நடிகர் தர்ஷன், அவரது நெருங்கிய தோழியான நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் உள்ளனர். இப்படி இருக்க காவல் துறையின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளின்படி, ரேணுகாசாமி தனிப்பட்ட சண்டைப்பிரச்சனை காரணமாக சந்தேக நபர்களால் சித்ரதுர்காவிலிருந்து பெங்களூருவுக்கு காரில் கடத்தி வரப்பட்டார். பின்னர் அவர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், கன்னடத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் தர்ஷன் கைது செய்யப்படுதல், தென்னிந்திய சினிமாவில் பல விவாதங்களை கிளப்பியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரில் தர்ஷன் உட்பட 7 பேர் தற்போது பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ளனர்.

மீதமுள்ள 10 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் வெளியே இருந்து வந்துவருகின்றனர். வழக்கின் தன்மை மிகவும் தீவிரமானதாக இருப்பதால், பல முறை ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோதிலும், முக்கிய குற்றப்பத்திரிகை நபர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குக்கான விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. சமீபத்திய விசாரணை சுற்று நேற்று முன்தினமும், தொடர்ச்சியாக நேற்றும் நடந்தது. நீதிபதி வீரப்பா இந்த வழக்கின் விசாரணையை கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், சாட்சிகளிடம் விசாரணையை எப்போது தொடங்குவது? யாருக்கு சம்மன் அனுப்ப வேண்டும்? என்ற தலைப்புகளில் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டபின், “தீர்மானத்தை நாளை அறிவிக்கப்படும்” என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: A.R.Rahman கையிலதான் 'MOON WALK' படமே..! எல்லா பாடலிலும் அவர் வாய்ஸ் தான்..Vibe-ல் Fan's..!

அதன்படி, நேற்று மீண்டும் ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை நீதிபதி வீரப்பா முன்னிலையில் நடைபெற்றது.  நீதிபதி வீரப்பா, விசாரணையை வருகிற 17 ஆம் தேதி முதல் தொடங்க உத்தரவிட்டார். இது வழக்கின் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சாட்சிகளின் வாக்குமூலங்களே வழக்கின் திசையையும் மேலும் சட்டநடவடிக்கைகளையும் தீர்மானிக்கும். அன்றைய விசாரணையில் நீதிபதி, ரேணுகாசாமியின் தந்தை காசிநாத் சிவனகவுடர், தாய் இருவருக்கும் சம்மன் வழங்க உத்தரவிட்டார். இவர்கள் இந்த வழக்கில் 7 மற்றும் 8வது சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அளிக்கும் சாட்சியங்கள் வழக்கில் மிக முக்கியமானவையாக இருக்கும். மேலும், இந்த வழக்கில் 14வது குற்றவாளி என சேர்க்கப்பட்டிருக்கும், நடிகர் தர்ஷனின் நெருங்கிய நண்பரான பிரதோஷ், அவரது மறைந்த தந்தையின் சடங்குகளில் பங்கேற்க 4 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி வீரப்பா, “மனிதாபிமானக் காரணத்திற்காக” இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த இடைக்கால ஜாமீன் காலம் முடிந்ததும் அவர் மீண்டும் காவலில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி, முழு வழக்கையும் 17 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் முதல் தொடர்ச்சியான சாட்சிப் பதிவுகள் குற்றப்பத்திரிக்கை வாதங்கள் பாதுகாப்பு தரப்பின் எதிர்வாதம் என முழுமையான விசாரணைகள் நடைபெறவிருக்கின்றன. இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் நேரடியாக குற்றப்பத்திரிகை தயாரிப்பு பட்டியலில் இடம்பெற்றிருப்பது கன்னட சினிமாவில் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. அவரின் திரைப்படங்கள், ரசிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என பலரும் வழக்கின் தீர்ப்பை மிகவும் அருகிலிருந்து கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் ரேணுகாசாமியின் பெற்றோர் பலமுறை, “எங்கள் மகனை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

தற்போது அவர்களுக்கும் நீதிமன்றத்திலிருந்து அதிகாரப்பூர்வ சம்மன் வந்துள்ளதால், அவர்கள் அளிக்கும் சாட்சி மிகவும் மையப்புள்ளியாக இருக்கும். போலீஸ் விசாரணையின் அடுத்த கட்டம் போலீஸார் ஏற்கனவே மொபைல் டவர் லொகேஷன், வாட்சாப் மெசேஜ்கள், சிசிடிவி காட்சிகள், குற்றநிகழ்விட ஆதாரங்கள் என இந்த எல்லாவற்றையும் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். சாட்சிகளின் வாக்குமூல்கள் சேர்க்கப்பட்டதும் வழக்கு மேலும் வேகப் பெறக்கூடும். இப்படி இருக்க சில சட்ட நிபுணர்கள் கூறுகையில், “இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்களே மிக முக்கியம். குற்றப்பத்திரிக்கையில் குற்றம் நிரூபிக்க அனைத்து தரப்பிலும் வலுவான ஆதாரங்கள் தேவைப்படும். வழக்கு நீண்டகால விசாரணையாக நீளும் வாய்ப்பு அதிகம்” என்றனர்.

ஆகவே ரேணுகாசாமி கொலை வழக்கு, கன்னடத் திரையுலகம், பெங்களூரு சட்டவட்டாரம், சித்ரதுர்கா பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழகத்திலும் பரவலாக கவனத்திற்குரிய ஒன்றாக மாறியுள்ளது. எனவே வருகிற 17 ஆம் தேதி முதல் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவது, இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பமாக இருக்கும். நீதிமன்ற உத்தரவுகள், ஜாமீன், சம்மன், சாட்சிகள் என வழக்கு முழுமையாக வேகமான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Impress பண்ணனும்னா இப்படி பண்ணனும்..! லண்டனில் ஷாருக்கான் - கஜோலுக்கு வெண்கல சிலையா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share