×
 

Karthigai Deepam: கைது செய்யப்படும் ராஜராஜன்; பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி..!

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், இன்ஸ்பெக்டர் துரையால் ராஜராஜன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ராஜராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இன்னொரு பக்கம் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் தொடங்கி நடக்கிறது. அப்போது பூஜையில் ராஜராஜன் சில சடங்குகளை செய்ய வேண்டும் என அவரை அழைக்கின்றனர். 

ராஜராஜன் எங்கும் இல்லாத நிலையில் அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கையில் இன்ஸ்பெக்டர் துரை ராஜராஜனிடம் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அவர் தான் ஜீப்பில் அழைத்து சென்றதாகவும் தெரிய வருகிறது. இதனால் கார்த்திக்கு இடையில் என்னமோ நடந்திருக்கு என்று சந்தேகம் உருவாகிறது. 

அதை தொடர்ந்து பூஜை குறித்து சாமியாரிடம் அருள்வாக்கு கேட்க அவர் ராஜராஜனுக்கு பதிலாக கார்த்தியே இந்த சடங்குகளை செய்யலாம் என்று சொல்கிறார். பிறகு கார்த்தியை பூஜையில் உட்கார வைக்க போகும் சமயத்தில் ராஜராஜனை அழைத்து வந்து விடுகின்றனர். 

இதையும் படிங்க: Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை ஏமாற்றிய கார்த்தி! உயிர் பிழைத்த ரோகினி - கார்த்திகை அப்டேட்!

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

இதையும் படிங்க: Karthigai Deepam: ஹாஸ்பிடலில் ரோகினி! உதவ வரும் பரமேஸ்வரி பாட்டி - தடுக்கும் சாமுண்டீஸ்வரி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share