Karthigai Deepam: கார்த்தியிடம் நடந்த டீலிங்... துப்பாக்கியை கையில் தூக்கிய ரேவதி!
நேற்றைய எபிசோடில் மேரேஜ் சர்டிபிகேட் இல்லாமல் விசா கிடைக்காது என விசா ஆபீஸில் கூறிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நேற்று முதல், 45 நிமிடங்களாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில்... இன்றைய தினம், கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ராஜராஜனை ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக திட்டம் போட்டு இருவரும் அத்தை சொன்னத செய்ய மாட்டாங்க என்று மயில்வாகனம் சொல்ல கார்த்திக் கண்டிப்பா செய்வாங்க என்று சொல்கிறான்.
இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை பார்க்க சாமுண்டீஸ்வரி என்ன விஷயம் என்று கேட்க மயில்வாகனம் விஷயத்தை சொல்கின்றான். இதைக் கேட்ட அவள் ஆமா நானே மறந்து விட்டேன் என்று சொல்லி இராஜராஜனை ஊருக்கு அனுப்பி வைக்க சம்மதம் சொல்கிறாள்.
ஆனால் ராஜராஜன் நான் தனியா போக மாட்டேன்.. என்னுடைய குடும்பத்தோட போனால் தான் அங்க எனக்கு மரியாதை என்று சொல்லிவிட சாமுண்டீஸ்வரி என்னால் வர முடியாது என மறுக்கிறாள். கார்த்திக் என்ன செய்வது என தெரியாமல் இருக்க ,ரேவதி உனக்கு நான் உதவுகிறேன் எனக்கு நீ உதவி செய்யணும் என்று டீல் பேசுகிறாள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: ரேவதி எடுத்து முடிவு... கார்த்திக் கொடுத்த வார்னிங்! கார்த்திகை தீபம் அப்டேட்!
பிறகு துப்பாக்கியை வைத்துக்கொண்டு ரேவதி நீங்க சம்மதிக்கலனா என்னை சுட்டு கொள்வேன் என்று சொல்லி மிரட்டி சாமுண்டீஸ்வரியை சம்மதிக்க வைக்கிறாள். அதனைத் தொடர்ந்து கார்த்தியை ரிஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு அழைத்துச் சென்று வெளிநாடு செல்ல போகும் விஷயத்தை சொல்லி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து பிறகு அந்த சர்டிபிகேட்டை வாங்கி போய் விசாவுக்கு அப்ளை செய்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக் - ரேவதி போடும் புது பிளான்? கார்த்திகை தீபம் அப்டேட்!