×
 

Anna Serial: ஷண்முகம் வீட்டில் இருந்து கண்ணீரோடு வெளியேறும் பாக்கியம் - என்ன நடந்தது?

அண்ணா சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் பாக்கியம் இசக்கியை அழைத்து செல்ல வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வைகுண்டம் சண்முகம் வந்துடட்டும் ஒரு வார்த்தை சொல்லிட்டு கூட்டிட்டு போங்க என்று சொல்கிறார். பிறகு சண்முகத்திற்காக காத்திருக்க வீட்டிற்கு வந்த அவன் இசக்கியை அனுப்ப முடியாது என்று சொல்கிறான். 

பரணியும் இங்க இருக்க போறது இல்ல.. அவளை யார் பார்த்துப்பா வீட்டிற்கு கூட்டிட்டு போறோம் என்று பாக்கியம் சொல்ல சௌந்தரபாண்டி மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறான். முத்துப்பாண்டி அவர் என்ன பண்ண போறாரு, இசக்கி வயித்துல வளர்வது அவரோட வாரிசு என்று சொல்லியும் சண்முகம் ஏற்க மறுக்கிறான்.

 

பாக்கியம் என்னை அம்மா மாதிரினு வெறும் வாய் வார்த்தையா சொல்லி இருக்க.. அம்மா கேட்டா இப்படி தான் சொல்வியா என்று கண்ணீருடன் கிளம்பி செல்ல எல்லாரும் வருத்தப்படுகின்றனர். இசக்கியின் முகமும் வாடுவதை பரணி கவனிக்கிறாள். 

இதையும் படிங்க: Anna Serial: சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பும் இசக்கி! கொந்தளித்த வீரா - அண்ணா சீரியல் அப்டேட் !

இசக்கியிடம் பேச அவள் அண்ணன் சொன்ன சரியா தானே இருக்கேன்.. சரி விடு நான் இங்கேயே இருக்கேன் என்று சொல்கிறாள். மறுபக்கம் வீட்டிற்கு வந்த பாக்கியத்திடம் சௌந்தரபாண்டி உன் மருமகளை இல்லாமல் உன்னால் இருக்க முடியுமா? என்று உசுப்பேத்தி வா போய் கூட்டிட்டு வரலாம் என்று கிளம்பி வருகிறார். 

எதிரே வந்த முத்துப்பாண்டி கொஞ்சம் டைம் கொடுங்க.. நானே இசக்கியை இந்த வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்று சொல்கிறான், அடுத்து பரணி தான் எப்படியெல்லாம் வாழ ஆசைப்பட்டேன் என்று இசக்கியிடம் வருத்தப்பட்டு சொல்கிறாள். இதை சண்முகம் கேட்டு விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்கலாம் . 

இதையும் படிங்க: சண்முகம் மீது சந்தேகம் கொள்ளும் பரணி; சட்டையை பிடித்த முத்துப்பாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share