×
 

Anna Serial: சௌந்தர பாண்டியின் சதியால்... சண்முகத்தின் கோபத்திற்கு ஆளான இசக்கி!

அண்ணா சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சூடாமணிக்கு திதி கொடுக்க ஏற்பாடு நடக்க வைஜெயந்தி திட்டமொன்றை தீட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது வைஜெயந்தி தனது மகன் கௌதமை ஸ்டேஷனுக்கு வர வைக்கிறாள். பிறகு வீராவின் வண்டியை பஞ்சர் செய்ய சொல்லி, இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறாள். அதன் பிறகு வீராவுக்கு அனுமதி கொடுக்க அவள் வண்டியை எடுக்க வர வண்டி பஞ்சர் ஆகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். 

இந்த சமயத்தில் அங்கு வந்த கௌதம் அவளுக்கு லிப்ட் கொடுப்பதாக சொல்லி அழைத்து கொண்டு கிளம்புகிறான். இன்னொரு பக்கம் சௌந்தரபாண்டி இசக்கி போக விடாமல் செய்ய திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அதாவது முத்துப்பாண்டி வேலையில் இருக்க, சௌந்தர பாண்டி இசக்கி அழைத்துக்கொண்டு வேண்டுமென்று காரை மெதுவாக ஓட்டுகிறார். 

அதன் பிறகு சிவபாலன் அவரை நகர சொல்லிவிட்டு காரை போட்டு உட்கார கார் பெட்ரோல் இல்லாமல் ஸ்டார்ட் ஆகாமல் நிற்கிறது. சிவபாலன் பெட்ரோல் பங்க் செல்ல இசக்கி முத்து பாண்டிக்கு போன் போட்டு தகவல் கொடுக்கிறாள். வீரா கௌதம் உடன் வந்து இறங்க சண்முகம் இவன் கூட எதுக்கு வந்த என்று கேட்க வண்டி பஞ்சர் ஆகி விட்டதாக சொல்கிறாள். 

இதையும் படிங்க: Anna Serial: அண்ணனை அம்மாவாக நினைக்கும் தங்கைகள் - பஞ்சாயத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்!

கௌதம் நல்லவன் போல வேஷம் போட்டு சூடாமணி போட்டோவை தொட்டு வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான். பிறகு திதி கொடுக்கவும் தொடங்க இசக்கி நேரமாவதால் காரில் இருந்து இறங்கி வேக வேகமாக நடக்க தொடங்குகிறாள். அதற்குள் இங்கே திதி கொடுத்து முடித்து பிண்டத்தை கரைத்து விடுகின்றனர். 

லேட்டாக வந்த இசக்கியை சண்முகம் திட்டி விடுகிறான். இதனால் இசக்கி கண்கலங்கி நிற்கிறாள். அதன் பிறகு போட்டோவாவது தொட்டு கும்பிடலாம் என்று செல்ல சண்முகம் போட்டோவை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட இசக்கி கண்ணீர் விட்டு அழுதபடி நிற்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

இதையும் படிங்க: Anna Serial: ரத்னாவை கொலை செய்ய போடும் திட்டம்! அறிவழகனுக்கு எதிராக நடக்கும் சதி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share