மீண்டும் உச்சத்தில்... இனி தங்கம் வாங்குவது வெறும் கனவு தான் போல..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துகொண்டே செல்வது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதையும் படிங்க: இன்று சற்று குறைந்த தங்கம் விலை.. ஆனா வெள்ளி..!! விலையை கேட்டாலே தலை சுத்துதே..!!
சமீபகாலமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் ரூ.81 ஆயிரம் ரூபாயை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரூ.82 ஆயிரத்தை தாண்டி ரூ.83 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த தங்கம் விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (16/09/2025):
இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.82,240க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.81 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை தற்போது ரூ.82 ஆயிரத்தை தாண்டி ரூ.83 ஆயிரத்தை நெருங்குவது இல்லதரிசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.77 அதிகரித்து ஒரு கிராம் 11 ஆயிரத்து 215 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.616 அதிகரித்து ஒரு சவரன் 89 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.144க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்ன?
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது.
இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.
இதையும் படிங்க: ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை நோக்கி பயணம்..!!