×
 

அடேங்கப்பா..!! தங்கம் விலை இன்னைக்கு இவ்ளோ குறைஞ்சிருக்கா..!! ஓடுங்க மக்களே..!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் இருந்தது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.71,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இறங்குமுகத்தில் தங்கம் விலை.. மக்கள் ஹேப்பியா ஹேப்பி..!

தங்கம் விலை நிலவரம் (28/06/2025):

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.74 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை, இன்று ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 742 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் 77 ஆயிரத்து 936 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் 117 ரூபாய் 80 காசுகளுக்கும், கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குறைவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

இதையும் படிங்க: அடடே.. தங்கம் விலை இவ்ளோ குறைஞ்சிருக்கா..!! உடனே கடைக்கு ஓடுங்க மக்களே..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share