×
 

ஒரேநாளில் புதிய உச்சம்.. சர்ரென உயர்ந்த தங்கம் விலை; ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்..!

இன்று ஒரே நாளில் தங்கம் விலை 1000 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்றைய வர்த்தகத்தின் போது, எவ்வித மாற்றமும் இன்றி தங்கம் விலை கிராம் 8,755 ரூபாய்க்கும், சவரன் 71,200 ரூபாய்க்கும் விற்பனையானது. 

தங்கம் விலை நிலவரம் (06/05/2024): 

இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 125 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 025  ரூபாய்க்கும், சவரனுக்கு 1,000 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: சரசரவென சரிந்த தங்கம் விலை; ஒரு கிராம் விலை இவ்வளவு கம்மியா?

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 136  ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 845 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,088  ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தங்கம் விலையில் தடாலடி மாற்றம்; கிராமிற்கு மட்டும் இவ்வளவு குறைவா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share