இனி நகை வாங்குவது கனவு தான்...! ஏறுமுகத்தில் தங்கம் விலை.. கலக்கத்தில் இல்லத்தரசிகள்..!
அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது நகை பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 8,930 ரூபாய்க்கும், சவரனுக்கு 71,440 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (22/05/2025):
இன்றைய நிலவரப்படி, (வியாழக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 975 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, ரூ.70 ஆயிரத்தை கடந்து 71 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ரூ.70 ஆயிரத்திற்கு கீழ் இருந்த தங்கம் விலை நேற்று முதல் உயர்ந்துகொண்டே வருவது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தடாலடியாக உயர்வு.. காலையிலேயே தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை..!
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 49 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 791 ரூபாய்க்கும், சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரத்து 328 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை உயர்ந்தது போல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்து 112 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தடாலடியாக உயர்வு.. காலையிலேயே தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை..!