×
 

ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா..?

இறங்குமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது உயர்ந்து கொண்டே வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள். 

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜூன் மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வந்த தங்கம் விலை, ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் தான் உள்ளது. அதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.72,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: தலை சுற்ற வைக்கும் இன்றைய கோல்ட் ரேட்.. பெண்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை நிலவரம் (03/07/2025):

இந்நிலையில் ஜூலை மாதத்தின் மூன்றாவது நாளான இன்றும் (வியாழக்கிழமை) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.71 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 933 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ஒரு சவரன் 79 ஆயிரத்து 464 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.  

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் 121 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை.. கன்னத்தில் கைவைக்கும் பெண்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share