×
 

நாளை பட்ஜெட்! இது மட்டும் நடந்திட்டா போதும்! தங்கம், வெள்ளி விலை இன்னும் குறையும்!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் இரண்டு நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு 1,900 ரூபாய் குறைந்து இருக்கிறது ஒரு சவரனுக்கு 15,200 ரூபாய் என சரிந்திருக்கிறது.

ஜனவரி மாத தொடக்கத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக வேகமாக சரிந்து வருகிறது. சென்னை சந்தையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 1,900 ரூபாய் குறைந்துள்ளது. 

ஒரு சவரனுக்கு (8 கிராம்) மொத்தம் 15,200 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வெள்ளி விலையும் கடுமையாக சரிந்துள்ளது. ஒரு கிராமுக்கு 75 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 75,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த சரிவு வீடுகளில் திருமணம், முகூர்த்தம் போன்ற நிகழ்ச்சிகளை திட்டமிட்டிருப்பவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

தங்கம் விலை உயர்வுக்கும் தற்போதைய சரிவுக்கும் முக்கிய காரணம் சர்வதேச சந்தை நிலவரங்களே. அமெரிக்காவின் வெனிசுலா மீதான ராணுவ நடவடிக்கை, கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்த அறிவிப்பு, ஈரான் மீது தாக்குதல் மிரட்டல் போன்ற புவிசார் பதற்றங்கள் தங்கத்தை பாதுகாப்பு சொத்தாக மாற்றின. 

இதையும் படிங்க: அடிதூள்..!! தடாலடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!!

அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும் விலையை உயர்த்தியது. ஆனால் வட்டி குறைப்பு எதுவும் இல்லை. புவிசார் பதற்றங்கள் தணிந்துள்ளன. மேலும் அமெரிக்க மத்திய வங்கி தலைவராக கெவின் வார்ஷ் நியமிக்கப்பட்ட அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் இருந்து முதலீட்டை திரும்பப் பெற்று பங்குச்சந்தை மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளனர். தங்கம் விலை உச்சத்தை எட்டியதால் லாபம் பார்த்து பலர் விற்று வெளியேறியுள்ளனர். இந்த இரு காரணங்களால் உலக சந்தையில் தங்கம் விலை சரிந்தது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.

முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதால் திருமண நிகழ்ச்சிகளை திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த விலை குறைவு மிகவும் உதவியாக உள்ளது. விலை இப்படியே குறைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். நாளை (பிப்ரவரி 1, 2026) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 

தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை (தற்போது 6%) குறைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரி குறைக்கப்பட்டால் விலை மேலும் குறையும். வரி உயர்த்தப்பட்டால் விலை திரும்ப உயரும். கோடிக்கணக்கான மத்திய தர மக்கள் நாளைய பட்ஜெட் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் தலைகீழ் திருப்பம்..!! இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி விலை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share