×
 

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் தெரியுமா மக்களே..!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 2வது நாளாக அதிகரித்துள்ளது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் இருந்தது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அப்பாடா..!! இன்னைக்கு கொஞ்சம் குறைஞ்சிருக்கு.. நகை கடைக்கு போக ரெடியா மக்களே..!

தங்கம் விலை நிலவரம் (21/06/2025):

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.73,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் இருக்கும் தங்கம் விலை, மீண்டும் ரூ.74 ஆயிரத்தை நெருங்குவது இல்லத்தரசிகளிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ஒரு கிராம் 10 ஆயிரத்து 075 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.216 அதிகரித்து 80 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையான ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா..!! இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை.. கன்னத்தில் கை வைக்கும் பெண்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share