3 நாளில் ரூ.2000 அதிகரிப்பு! போக்கு காட்டும் தங்கம் விலை! வெள்ளிக்கும் கூடுது மவுசு!
சென்னையில் இன்று (டிசம்பர் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 25, 2025) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சமான ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,820க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் அதிகம் முதலீடு செய்வதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 23-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,02,160க்கு விற்பனை ஆனது. அடுத்த நாள் (டிசம்பர் 24) ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400 ஆனது. இன்று மீண்டும் ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560 ஆகியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது. இது நகை வாங்க விரும்பும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.245க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளிக்கு தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 23-ல் ரூ.234, 24-ல் ரூ.244, இன்று ரூ.245 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தொடர் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் திருமண சீசன் காரணமாக நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் விலை உயர்வால் பலர் வாங்குவதை தள்ளிப்போட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு குறைவு, பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் ஆகியவை தங்கம் விலையை பாதிக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200 ஆக இருந்தது. இப்போது ரூ.1,02,560 ஆக உயர்ந்து சுமார் 79 சதவீதம் அதிகரித்துள்ளது.
நகை வாங்குபவர்கள் விலை சற்று குறையும் வரை காத்திருக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியான தங்கம்..!! ஜெட் வேகத்தில் உயரும் விலை..!!