வாரத்தின் இறுதி நாளில் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை - சவரனுக்கு ரூ.1,120 உயர்வு...!
வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் போது, தங்கம் விலை கிராம் 9,150 ரூபாய்க்கும், சவரன் 73,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (02/08/2025):
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 140 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 150 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: அடடே.. இன்று குறைந்த தங்கம் விலை.. நகை கடைகளுக்கு படையெடுக்கும் பெண்கள்..!!
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 156 ரூபாய் உயர்ந்து 10 ஆயிரத்து 134 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,224 ரூபாய் அதிகரித்து 81 ஆயிரத்து 072 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் 123 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க அதிபராக டிரம்ப் நடத்தி வரும் வரி விதிப்பு போரால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா..?