ஹப்பாடா..! படிப்படியாய் குறையும் தங்கம் விலை..! நடுத்தர மக்கள் சற்று நிம்மதி..!
தங்கம் விலை சவரனுக்கு 480 குறைந்துள்ளது.
தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி. இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறங்குமுகத்தில் தான் உள்ளது. இந்த விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் ஏற்றம் இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் இறங்குமுகத்தில் தான் தொடங்கியது. அட்ஷய திருதியை நாளன்று குறைந்த தங்கம் விலை, அதன் பின் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்றும் விலை சற்று குறைந்துள்ளது. இது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை..!! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 குறைந்து ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்த சவரனுக்கு 14 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: குறைந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..?? குஷியில் மக்கள்..!!