×
 

இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

போர் நடந்துகொண்டிருக்கிறது. பல நாடுகள் தவிக்கின்றன. பாதுகாப்பான முதலீடாக கூறப்பட்ட தங்கம் விலை உயரவில்லை. ஏன் இந்த முரண்பாடு?

போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்தது. உலக அச்சம் காரணமாக பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்பட்டது. 

ஆனால் இப்போது போர் நடந்துகொண்டிருக்கும் நிலையிலும் தங்க விலை உயரவில்லை – மாறாக சரிந்து வருகிறது. இந்த முரண்பாடு முதலீட்டாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் – போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது. எண்ணெய் விலை ஏற்றத்தால் போக்குவரத்து செலவு, உற்பத்தி செலவு, உணவு விலை ஆகியவை உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாளே ஹேப்பியோ ஹேப்பி..!! தங்கம், வெள்ளி விலை இவ்ளோ குறைவா..??

பணவீக்கம் உயர்ந்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை விரைவில் குறைக்க வாய்ப்பில்லை. வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது முதலீட்டாளர்கள் பிக்சட் டெபாசிட், பாண்ட் போன்ற வட்டி தரும் முதலீடுகளை விரும்புகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்தால் வட்டி வருமானம் கிடைக்காது. இதனால் தங்கத்தின் தேவை குறைந்து விலை சரிவடைந்துள்ளது.

கமாடிட்டி நிபுணர் ஞானசேகரன் கூறுகையில், “இந்த சரிவு தற்காலிகமானது. கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கினால் தங்க விலை மீண்டும் உயரும். நீண்டகால அடிப்படையில் தங்கம் இன்னும் வலுவான முதலீடாகவே உள்ளது. தற்போதைய கணிப்பின்படி 10 கிராம் தங்கம் விலை 1.30 லட்சம் ரூபாய் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. எனவே இப்போது சிறிது சிறிதாக தங்க ஈடிஎஃப், சவரன் நகை முதலீடு செய்வது நல்லது” என்றார்.

போர் நீடித்தாலும், பணவீக்க அழுத்தம் தொடர்ந்தாலும் தங்க விலை குறுகிய வரம்பில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீண்டகாலத்தில் பொருளாதார நிலையற்ற தன்மை தங்கத்தை மீண்டும் பாதுகாப்பான தங்குமிடமாக மாற்றும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: வார கடைசி நாளில் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share