×
 

பெண்களுக்கு டபுள் ஷாக்..!! 2வது முறையாக அதிகரித்த தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்க விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் புதிய உச்சங்களைத் தொடர்ந்து வருகிறது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் விலை மாற்றங்கள் ஏற்படுவதால், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் கவலை நிலவி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கும், ஒரு சவரனுக்கு (8 கிராம்) ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கும் விற்பனையானது. இந்நிலையில், பகல் முன்னேறும் வேளையில் தங்க விலை மேலும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.240 கூடுதலாக உயர்ந்து ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,920 உயர்ந்து ரூ.1,14,160-க்கும் விற்கப்படுகிறது. இதன்மூலம், இன்று ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.2,560 உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அப்படியே தலைகீழாக மாறிய தங்கம், வெள்ளி விலை..!! இதுக்கு இல்லையா ஒரு எண்டு..!!

தங்கத்துடன் வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. காலை நேரத்தில் சற்று குறைந்திருந்த வெள்ளி விலை, தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.20 உயர்ந்து ரூ.300-க்கும், ஒரு கிலோ (பார்) வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

இந்த திடீர் உயர்வுகளால், திருமணம், விழாக்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் கடுமையான அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்கள், டாலர் மதிப்பு மாற்றங்கள், புவிசார் அரசியல் நிலவரங்கள் ஆகியவை தங்க விலையை பெரிதும் பாதிக்கின்றன. 

உள்நாட்டில் வரி மற்றும் கூலி செலவுகளும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன. மக்கள் தங்கம் வாங்குவதை தள்ளி வைத்து வரும் நிலையில், வியாபாரிகளும் சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். அடுத்த சில நாட்களில் விலை எவ்வாறு நகரும் என்பது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: அடிதூள்..!! தடாலடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share